224 ||__
அப்பாத்துரையம் - 29
துயரில் இன்பங்கண்ட நிறை இன்ப மனிதர்: இயேசு, புத்தர்
ஊனுடலில் வாழ்ந்துகொண்டே வானுலகில் உலவும் இத்தெய்வ உருவங்களை உள்ளபடி காணமாட்டார், அகத் தூய்மையற்ற தற்பற்றுலகின் மக்கள்!
4 6
காணாதவர் புறத்துக் கண் தடவுமே, கேளாதவர் புறத்துச்செவி யுமுடையார்; பேணார் புறப்பொறிகள் உள்ளுணர்வினால் காணாதன, கேளாதன தாமுணர்வரே.'
வ
தூய்மையுடையவர் கலப்பற்ற இன்பமுடையவர். துயரின் சின்னத்தை அவர்கள் வாழ்வில் காண்பது அரிதிலும் அரிது. துயரார்ந்த மனிதர் என இயேசுபெருமானைக் குறிப்பதுண்டு. ஆனால் இது அவர் புற வாழ்வு குறித்த தொடர் அவர் துயரங்கள் யாவும் பிறருக்காக அவர் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட துயரே. ஆனால் அவர் வாய்மொழிகள் எதிலும் துயரத்தின் தடத்தைக் காண முடியாது. துயரையே இன்பமாகக் கொண்ட, துயரில் இன்பங்கண்ட நிறை இன்ப மனிதர் அவர். இதே வகையான மற்றொரு பெரியார் புத்தர் பெருமான். தமது இந்த அனுபவத்தை அவர்தம் வாய்மொழியிலேயே பதிவு செய்துள்ளார்.
56
5"அழுதேன் உடன்பிறந்த மனிதர்
துயர்க்கெல்லாம், நான்
இழுதாய் உருகினேன் எலா
உலகுக்கும்; அதனால்
முழுதாம் விடுதலையில்
மூழ்கி மகிழ்கின்றேன்."
பழியிலும் பழியை எதிர்த்துப் போராடும் போராட்டத் திலும் இரண்டிலுமே அமைதிக் கேடு உண்டு, துன்பம் உண்டு. ஆனால் பின்னதன் பயனாக வந்தெய்தும் நிறை வாய்மையில், நேர்மைப்பாதையில் என்றுமழியா இன்பமன்றி வேறெதுவும் கிடையாது.