உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(226)

அப்பாத்துரையம் - 29

நிழலற்ற ஒளிபோல, களிம்பு நீக்கிய செம்புபோல, மாசு தீர்ந்த பொன்போலத் துன்பத்தின் தொடர்பற்ற, ஆணவத்தின் பற்றற்ற இடத்தில் தூய நீடின்பம் நிலவுகிறது.

பேரருட்பகவர் நற்செய்தி

உலக ஆசாரியர்கள், ஞானியர், அருளாளர், பகவர்கள் யாவரும் உலகுக்களித்த நல்லுரை, தெய்வமொழி இதுவே. அருமறை என்றும் வாய்மொழி என்றும் வழங்கப்பெறும் திருமறைகள் கூறுவது இதனையே.

துன்புற்றவர்க்கு இன்பமுண்டு. ஏழையர்க்கு வாழ்வுண்டு. நோயுற்றவர் சீர்ப்படுவர். தொழில் செய்பவர்கள் எழில் காண்பர். பழிக்காட்பட்டவர் பண்பு காண்பர். சேயகம் சென்றவர் தாயகம் மீள்வர் - இவையே அந்நன்மொழிகளின் சாரம்.

சிறு துன்புற்றவர் துன்ப நீக்கமே நாடுவர். இவர்களோ துன்பமே நீங்கிய நிலைகாட்டி நிறை இன்ப உறுதி கூறுகின்றனர். அதற்கு வழிகாட்டுகின்றனர். ஆனால் அந்த வழி முதலில் துன்ப வழியாகத் தொடங்குகிறது. பின் அவாத்துறத்தல் வழியாக உயர்கின்றது. அதன் பின்னரே கண்ணும் கருத்தும் முழுதுறழ ஈர்க்கும் இன்ப வழி மிளிர்கின்றது.

நோய் உற்றவர்கள் நோய் நீக்கமே நாடுவர். அருளாளரோ எந்நோயும் அகற்றி முழுநல உறுதி கூறுகின்றனர். அத்துடன் நிறை இன்பமும் காணும் ஆர்வம் அளிக்கின்றனர். ஆனால் நோய்க் காரணம் அறியும் சிந்தனை, மருந்து, நோன்புணவு ஆகியவை பிறர் நோய் தன் நோயாகக் கருதிப் பிறர்க்குச் செய்யும் தொண்டுதான். அதன் வழியேதான் அந்த நீடின்பம் கைவரப் பெறும்.

உலகின் மற்ற நற்செய்திகளெல்லாம் ‘ஒரு தீமை அகன்றது, ஒரு நன்மை அணுகுகின்றது' என்பதுடன் நிற்கும். அகன்ற தீமைக்குப்பின் தீமை வராமலிராது. அணுகிய நன்மை தங்காது. ஆனால் உலக ஆசாரியர் அல்லது பகவர் கூறும் நற்செய்தி தீமையே அகற்றி நன்மையே பெருக்கும் நன்மொழி ஆகும். அத்துடன் மேலீடாகப் பார்ப்பவருக்குத் தோற்றுவதுபோல, அவர்கள் நற்செய்தி கூறும் தீமை நீக்கம், நல்வளம் ஏதோ ஒரு