பேரின்பச் சோலை
251
முடியாது. இதுபோலவே நாம் காணும் வாழ்வின் ஆற்றலும் இன்ப அமைதியும் நாம் புறங்காணும் சூழலையோ செயலையோ பாறுத்தவையல்ல. அச்செயலுக்கு முன்னோ, பின்னோ, இடையிடையாகவோ, இடைவிடாதோ, மனிதன் பேணும் செயலற்ற அமைதிநிலையும் மோனமும்தான் வாழ்வை வளப்படுத்துபவை.
ஓய்வு இல்லாவிட்டால், தனிமை இல்லாவிட்டால் வாழ்வு இல்லை. ஏனெனில் தனிமையும் ஓய்வும் அக இன்பத்தின் தொலை ஒளிகள். மீண்டும் அத்திசையில் திரும்புவதற்குரிய சிந்தனை ஆக்கத்துக்கு வழிவகுப்பவையும் அவையே.
ஒவ்வொருவனும் தனிமையிலேயே தன்னைத்தானே உணருகிறான். தன் இயல்பை, தன் ஆற்றலை உள்ளவாறு உணர்வதும் அப்போதே. தன் ஆற்றலின் அளவும் எல்லையும் மட்டுமல்ல, அதன் தங்குதடையற்ற வளர்ச்சி எல்லையையும், எல்லையற்ற வளத்தையும் அக்காலத்திலேயே அவன் மதிப் பிட்டு மதிபெற முடியும்.
புற உலகவாழ்வின் ஆரவாரக் கம்பலையிலும் அவாக்களின் தாறுமாறான போக்குகளினால் விளையும் குளறுபடிகளிலும் கேளாத அகக்குரலை அவன் அப்போதுதான் கேட்க முடிகிறது. தனிமைக்குச் சிலர் அஞ்சுவதேன்?
தன் குற்றத்தைத் தான் அறிய மனிதன் இயல்பாக விரும்புவதில்லை. ஆனால் இது மனிதன் உள்ளார்ந்த இயல் பன்று, புற இயல்பே. அவன் புறவாழ்வும் புல இன்ப அவாக்களும் தன்னலமும் தற்பெருமையுமே அவனுக்கு இயல்பல்லாத இப்பண்பை இயல்பு போன்ற போலிப் பண்பாக்குகிறது. தனிமையிலும் தனிமைதரும் அமைதியிலும் அமைதி நோக்கிய சிந்தனையிலும் அவன் இழந்துள்ள இந்த உள்ளார்ந்த இயல்பு அவனை எளிதாக வந்து அடைகிறது.
புண்பட்ட உள்ளங்கள் அடிக்கடி புண்படுத்துபவரிடம் இயற்கையுணர்ச்சியால் உந்தப்பட்டு, இந்த அறிவுரையை அளிப்பது காண்கிறோம். 'தனியேயிருந்து சிந்தித்துப் பார், நீயேயிருந்து எண்ணிப்பார்' என்று அச்சமயத்தில் அவர்கள் கூறுவர். ஆனால் புண்பட்டவர்களும் சரி, புண்படுத்தியவர்களும்