உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12. தற்சார்புநிலை

1எந்நிலையிலும் தனிமைமுறை தன்னையே நீநாடு உன்னையே நீவழிபடு! உன் உளப்பண்பே கூடு

2 தெள்ளத்தெளிந்த இதயத்தே

செவ்வொளியேற்கும் செல்வந்தான்

- ஜார்ஜ் ஹெர்பட்.

கள்ளமிலாத பகல்வானின்

நடுவாம்கதிரோன் எனவயங்கும்

மில்ட்டன்

பேரின்ப நோக்கிய வாழ்வில் திடமான தன்னம்பிக்கை அல்லது தன்னுறுதி முதன்மைத் தேவை ஆகும். ஏனெனில் பேரின்ப வாழ்வுக்கு ஆற்றலும், ஆற்றலுக்கு அமைதியும், அமைதிக்குச் சரிசமநிலையும், சரிசமநிலைக்கு மைய உறுதி யாகிய தன்னுறுதியும் இன்றியமையாதவை. ஆகவே நீடித்த இன்பம் நாடுபவன் தன்னையன்றி எவர்மீதும், தனக்குப் புறம் பான எப்பொருள்மீதும் சார்தல் ஆகாது. அப்பொருள்கள் எந்தக் கணத்திலும் உன் வாழ்வுடன் தொடர்பற்றுப் போகத்தக்கவை, அழியத்தக்கவை. உறுதியற்ற மணலில் கட்டிய கட்டடம்போல அவற்றின்மீது சார்ந்த உன் வாழ்வு பாழாய்விடும்.

தான் நிற்பதற்குரிய மையத்தளமொன்றைத் தன்னுள் காணும்வரை ஒருவன் வாழ்வு தொடங்கிவிட்டதாகவே கூற முடியாது.வாழ்வின் செயல்கள், பண்புகள் யாவற்றுக்கும் உறவும், தொடர்பும், ஒழுங்கும் அளித்து, வாழ்வியக்கத்தை உண்டு பண்ணுவதே இந்த மூலதளம்தான். அதன் மையநிலை பேணியே அவன் சரிசமநிலையாகிய அமைதி காண முடியும். ஆட்டங் காணும் எதையும் அவன் சார்ந்தால், அவன் சரிசம நிலையமைதி கெட்டு, அவன் வாழ்வும் ஆட்டங்காண வேண்டிவரும். அவன்