உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

(281

ஓய்வு தேவைப்படாத அளவுக்கு அது களைப்பகற்றி விடுவது மட்டுமல்ல, நிலையான அமைதியும் தருவது. அதுவே எல்லையற்ற ஆறுதல் அளிப்பது. வரம்பிலா ஆற்றலும் உறுதி யும் உண்டுபண்ணும் வளம் உடையது.

இப் பண்ணையை அடைபவன் இதை அணுகுமுன்னரே எல்லாக் குறைகளையும், எல்லா அவாக்களையும்; எல்லா ஐயங்களையும், எல்லாக் கலகங்களையும்; எல்லாத் துயரங் களையும் எல்லா ஊசலாட்டங்களையும் விட்டொழித்தவனா கிறான். மனநிறைவென்னும் பொங்கல் வளத்திலே, அறி வொளியிலே, இன்ப உறுதியிலே அவன் மிதக்கிறான். ாழ்க்கையின் களங்கமற்ற, தெள்ளத் தெளிந்த படிகநிற ஆழ்தடங்களை முற்ற உணர்ந்தவனாதலால், அவன் அதன் தெள்ளமைதிகளை எளிதாகப் பின்பற்றி இன்பம் காண்கிறான். அதை விட்டுத் தன்னல அவாக்களின் கடுஞ் சிக்கல் வாய்ந்த, இருண்ட, இடரார்ந்த இடுமுடுக்குகளில் அவன் திரும்புவ தில்லை.

எந்தத் தீங்கும் அணுகமுடியாத, எந்தப் பகைமைக்கும் எட்ட ஒண்ணாத காப்பான காவகத்தே அவன் செல்கிறான். ஐயங்கள், அவாக்கள், துயர்கள் எங்கு, எவ்வாறு நிகழக்கூடும் என்பதையே அவன் அறியமாட்டான். ஏனெனில் மெய்மைதோன்றுமிடம் ஐயமகன்ற இடம். எல்லையிலா நிலவர இன்பம் நிறைவுறும் டம், தொல்லை தரும் துன்பத்தின் தடமகன்ற இடம்.

தளராத, என்றுமுள்ள நல்லொளி கண்டுணரப்பட்ட போது அங்கே துன்பத்துக்கு எவ்வாறு இடம் இருக்க முடியும்? ஒழுங்குகளின் பின்னல் தொகுதியே வாழ்க்கை!

மனித வாழ்க்கை சிக்கல் வாய்ந்ததன்று. சரியான முறையில் வாழ்பவனுக்கு அது எளிது, அழகுவாய்ந்த எளிமை நலம் உடையது. ஆனால் சரியான வழி அறியாதவனுக்கு, சரியான நேர்பாதையறிந்து செல்லாதவனுக்கு அது பல சிறுதிறப் போலி

ன்பங்கள், அவாக்கள், குறைபாடுகள் நிறைந்த கடுஞ் சிக்க லாகத் தோன்றாதிருக்க முடியாது. இவை வாழ்வின் சிக்கலல்ல, வாழ்வல்ல-வாழ்வினைக் கெடுக்கும் கேடுகள், நோய்கள். உடலின் கோளாற்றினாலே வரும் காய்ச்சல் முதலிய நோய்கள் போல,