உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

39

நகரில் கவின்மிக்க கோயில்கள் பல இருந்தன. தெய்விகத் தருவாக வணங்கப்படும் கற்பகம், தெய்வயானையாகிய அயிராவதம், வானவர்வேந்தன் இந்திரனுக்குரிய இடிப்படையான வச்சிரப் பொறி, பலதேவன், வெங்கதிர்ச்செல்வன், தண்கதிர்ச் செல்வன், சிவன், முருகன், சாதவாகனன், நிகண்டன், காதற் கடவுளாகிய காமன், சாக் கடவுளாகிய கூற்றுவன் ஆகியோர் களுக்குரிய கோயில்கள் அமைந்திருந்தன. இவை தவிர வானவர்வேந்தன் இந்திரனால் கட்டப்பட்டதாகக் கருதப்பட்ட ஏழு புத்த விகாரங்களில் 300 புத்தத்துறவிகள் வாழ்ந்து வந்தனர். கூற்றுவன் கோயில் நகருக்கு வெளியே இடுகாட்டில் இருந்தது.14

நகருக்கு வெளியே சூரிய குண்டம், சந்திர குண்டம் என வெங்கதிர்ச்செல்வனுக்கும் தண்கதிர்ச்செல்வனுக்கும் திருவுரிமைப் படுத்தப்பட்ட இரண்டு ஏரிகள் இருந்தன."S

கோட்டையைச் சூழ்ந்திருந்த அகன்ற அகழியில் அழகிய மலர்கள் நிறைந்திருந்தன. அவற்றின் அருகிலே பறவைகளின் கலகலப்பு இடைவிடாது கேட்கப்பட்டது!"

116

கோட்டைவாயில்களில் சோழர் கொடிச் சின்னமான புலியின் உருவம் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தது.17

தமிழகத்துக்கென்று எகிப்திய வணிகக் களங்களில் கொண்டு குவிக்கப்பட்ட எல்லாப் பொருள்களும், தமிழகத்தின் விளை பொருள்களும், செய்பொருள்களும் யாவும் முடிவில் சோழர் கடற்கரைக்கே வந்து சேர்ந்தன.

66

‘கடல் கடந்த நாடுகளிலிருந்து கலங்களில் குதிரைகள் வந்திறங்கின. மிளகும் கப்பல்களில் கொண்டுவரப்பட்டன. வட மலைகளிலிருந்து தங்கமும் பன்மணிக்கற்களும் வந்தன. மேற்கு மலைகளிலிருந்து சந்தனமும் அகிலும் கொண்டு குவிக்கப் பட்டன. தென்கடல் முத்தும் கீழ்கடல் பவளமும் இங்கே குழுமிக்கிடந்தன. கங்கைத் தீரத்தின் விளைபொருள்கள், காவிரிக்கரையின் வளங்கள் காழகத்தின் (பர்மாவின்) செய்பொருள்கள் யாவும் காவிரிப் பட்டினத்தின் வாணிகக் களத்துக்கு வந்து இறங்கின.

"118