உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

43

பஸர் நாகாஸின் மன்னுரிமைத் தலைநகரென்று குறிக்கப் பட்ட மிலங்கா, மாவிலங்கையின் தலைநகரான காஞ்சிபுரமே யாகும். அவெர்னாயின் மற்றொரு நகரமான ஃவ்ரூரியன் பெரும் பாலும் செங்கடற்பயணம் குறிக்கும் சோபட்மாவாகவே இருக்க வேண்டும். கிரேக்க மொழியில் ஃவ்ரூரியன் என்ற சொல் ‘படை காப்புடைய கோட்டை' என்ற பொருள் உடையது. இது ஒரு கடற்றுறை நகராயிருந்ததனால் தமிழரால் பொதுவாக ‘எயில் பட்டினம்' என்றும் குறிக்கப்பட்டது25. இப்பெயரின் பொருளும் சோப்பட்டினம் என்ற பெயரின் பொருள்போன்றதே - இரண்டும் அரண்செய்யப்பட்ட பட்டினம் என்ற கருத்தே தருகின்றன.

இத்துறைமுகங்களில் செங்கலாலும், காரையாலும் கட்டி எழுப்பப்பட்ட உயரிய கலங்கரை விளக்கங்கள் இருந்தன. கப்பல்களைத் துறைமுகங்களின் திசைநோக்கி அழைக்கும் முறையில் இங்கே இராக்காலங்களில் பேரொளி விளக்கமுடைய விளக்குகள் எரிந்தன!

கீழ்கரையில் தமிழகத்தின் வடக்கெல்லை தற்போது பழவேர்க்காடு (அல்லது புலிக்காடு) என்று அழைக்கப்படும் வேர்க்காடாயிருந்தது!27 இதற்கப்பால் வடுகர் நாடு இருந்தது. இங்கே வடுகமொழி பேசப்பட்டது. தற்கால எருமை நாடு அல்லது மைசூரை ஆண்டவன் 'வடுகத் கோமான்' என்று அழைக்கப் பட்டான். இதிலிருந்து, அப்பழங்காலத்தில் திருப்பதிக்கு வடக்கே இருந்த மக்களும் மைசூரில் வாழ்ந்த மக்களும் வேற்றுமையின்றி ஒருங்கே வடுகு என்ற ஒரே மொழியையே பேசினார்களென்பதும், தெலுங்கும், கன்னடமும் அப்போது இருவேறு மொழிகள் ஆகவில்லையென்பதும் விளக்கமுறுகின்றன.

கிழக்கு மேற்கு மலைத்தொடர்கள் கடந்த உள்நாட்டுப் பகுதியில் தற்காலத் திருப்பதி அல்லது வேங்கடமே தமிழகத்தின் வட எல்லையாய் இருந்தது. இப்போதும் 1800 ஆண்டுகள் கழிந்து, தமிழர், தெலுங்கர், முசல்மான்கள், பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகிய எத்தனையோ இனத்தவர் அரசியலில் ஆதிக்கத்துக்கு வந்து வந்து சென்று பல அரசுகள் வளர்ந்து தளர்ந்த பின்னும், கீழ் கரையில் இம் மொழியெல்லை மாறாமலிருப்பது மிகவும் வியப்புக்குரியதே யாகும், ஏனெனில் மேல்கரையில் தமிழக