உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

131

கொண்டிருக்கும்போதும், நம் தொழில்களுக்கு விஞ்ஞான ஆலோசகரில்லாமல் வெளிநாட்டு அறிஞரை நாம்

நம்பவேண்டிய நிலையிலிருக்கும்போதும், ஷேக்ஸ்பியர் கவிதை யாராய்ச்சித் திறமோ, உரோம நாட்டுச் சட்ட விற்பனமோ உடைய வல்லுநர்களை உற்பத்தி செய்வதில் என்ன பயன்!

உயர்தரக் கல்வியிலும், அடிப்படை மாறுதல்கள் செய்தாக வேண்டும். ஆனால், தொடக்கநிலை, இடைநிலைக் கல்வி நிலையங்களின் அமைப்புக்களைச் சீர்திருத்திப் பின் அந்த உறுதியான அடிப்படை மீதே உயர்தரக் கல்வி சீர்திருத்த வேலை தொடங்கப்பட முடியும். நம் தற்காலத் தொடக்க, இடைநிலைக் கல்வியமைப்பு எல்லா வகையிலுமே அதிருப்தி தருவதாயுள்ளது. குழந்தைகள் வகுப்புகளில் மந்தைகள் போல் அடைக்கப் படுகிறார்கள். கற்றுக் கொடுக்கும் பாடமோ பொருட்சார்பற்ற கருத்துக்கள். கற்பிக்கும் முறை கருத்தைக் கவராத முறை. பிள்ளைகளைக் கல்வியில் கருத்துச் செலுத்தும்படி செய்யா விட்டால் அக்கல்வியால் என்ன பயன்? எடுத்துக் காட்டாக, இந்தியச் சிறுவனுக்கோ சிறுமிக்கோ இங்கிலாந்தின் வரலாறு கற்பிப்பதேன்? அந்நாடு அவர்களுக்கு அறிமுக மற்றது. சமூகத்தொடர்பு பற்றியவரை அதன் மக்கள் அவர்களுக்குத் தொடர்பற்ற அயலார்கள். இயற்கைப் பாடத்தில் கற்றுக் கொடுக்கும் செடிகொடியைப் பையனுக்குக் காட்டாமல் அப்பாடத்தை அவனுக்குக் கற்பிப்பதால் நன்மை யாது? நம்மைப் 'புத்தகப் பூச்சிகள்' என்று பிறர் குறை கூறினால், அதில் வியப்புக்கு என்ன இடம் இருக்கமுடியும்? வாழ்க்கைத் தொடர்பில்லாத அறிவைத்தானே நாம் பெறுகிறோம்! அதுமட்டுமா? நிலைமை உண்மையில் அதைவிட மோசமானது. நச்சுத்தன்மை வாய்ந்த அடிமை மனப்பான்மை யுணர்ச்சி நம் கல்விமுறை முழுவதும் பரவியுள்ளது. நான்காம் வகுப்புத் தாய்மொழிப் பாடத்தில் (எழுத்தறிவு ஓரளவு முற்றும் பெற்றுப் பொருளறிவு தொடங்கும் வகுப்பில்) முதல் பாடமே இராஜ-சக்கரவர்த்தியையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் பற்றிய தாயிருக்கிறதே! நம் நாட்டு வரலாற்று ஏடுகளைப் பார்த்தால் அவை யனைத்தும் பிரிட்டிஷார் வருவதன்முன் இந்தியாவில் எல்லாம் ஒரே குழப்பம் என்றும், பிரிட்டிஷாரே இங்கே ஒழுங்கமைதியைக் கொண்டு வந்தவர்கள் என்றும், ஆதலால் அவர்கள் வரவு ஒரு தெய்வச்