உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

27

வேலையாள். அவனிடம் உணவு சிறிதும் இல்லை. அவன் அவர்களைத் தன் தலைவனிடம் அழைத்துச் சொன்றான். தலைவனாகிய இடையன் தன்னுடைய வீட்டையும் ஆட்டையும் விற்று விடமுயன்றான். அதனை அறிந்த அவர்கள் அவற்றை விலைகொடுத்து வாங்கிக்கொண்டு, உண்ண உணவும் இருக்க இல்லமும் கிடைக்கப் பெற்றவளாய் மகிழ்ந்தார்கள்; தந்தையைத் தேடிக் காணும் வரை அங்கு இருக்கத் துணிந்தார்கள்.

ரோஸலிண்ட் இடையனாகவும், ஸீலியா இடைச்சி யாகவும் வாழ்ந்த வாழ்வு அவர்களுக்கே புதுமையாக இருந்தது. ஆனாலும் ரோஸலிண்ட் ஆர்லண்டோவை மறக்கவில்லை; அடிக்கடி அவனைக் குறித்து எண்ணி வந்தாள்.

3. ஆர்லண்டோ அரசனுடன் வாழ்தல்

ஆர்லண்டோவின் தந்தை இறந்துவிட்டார்: அவர் இறக்கும் போது, மூத்த மகனாகிய ஆலிவர்' என்பவனைப் பார்த்து, 'நீதான் உன் தம்பி ஆர்லண்டோவைக் காப்பாற்ற வேண்டும்,' என்று கூறினார்.ஆனால், ஆலிவர், அதற்கு முற்றிலும் மாறாக நடந்தான்; தம்பியின்மேல் பொறாமை கொண்டான். நன்மை ஒன்றும் செய்திலன்; தீமை மிகப்பல செய்தான்.மற்போரில் ஆர்லண்டோவை ஈடுபடுமாறு வற்புறுத்தியவனும் இவனே. ஆர்லண்டோ அறிவிற் சிறந்தவனாகவிளங்கினான்.அவன் அண்ணனுடைய கொடுமையை நினைந்து நினைந்து வருந்தினான். அவன் வெற்றிமேல் வெற்றி பெற்று ஊக்கமுடன் வாழ்வதைக் கண்டு ஆலிவர் மனங் கொதித்தான்.

ஒருநாள் ஆர்லண்டோ இல்லாதபோது, “அந்தப் பயலை நான் தொலைத்துவிடவேண்டும். அதற்கு வழிகண்டேன். அவன் உறங்கும் போது அந்த அறைக்குத் தீ வைத்துக் கொளுத்தி விடுவேன்,” என்று ஆலிவர் வாய்விட்டுச் சொல்லிக் கொண்டான். இதைக் கேட்டறிந்தான் ஆதம்" என்னும் வேலையாள்; ஆர்லண்டோ வீடு திரும்பியதும் அவனுக்குத் தெரிவித்தான். என்ன செய்வது என்று இருவரும் எண்ணி ஒரு முடிவிற்கு வந்தனர்.

அந்த முடிவின்படி, ஆர்லண்டோ, ஆதம் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர்; நெடுந்தூரம் அலைந்தனர்;