62
அப்பாத்துரையம் - 37
வலிமை வாய்ந்த பகைவனைக் காணும் வரையில், உன்னை எதிர்ப்பதே என் கடமை,” என்று சொல்லிக் கொண்டே தன் வாளை உருவினான். ஆனால், பிராஸ்பிரோ, தன் மந்திரக்கோலை அசைத்து, நின்ற இடத்திலேயே அவனை நிற்கச் செய்தான். பெர்திநந்து அசையவுமில்லை.
66
ஏன்
மிராந்தா தன் தந்தையைப் பற்றிக்கொண்டு, இவ்வளவு கொடுமையாக நடக்கிறீர். இவருக்காக நான் உ உறு றுதி கூறுகிறேன். இவர்மீது இரக்கம் கொள்ளுமாறு வேண்டுகிறேன். உம்மைத் தவிர, நான் பார்த்தது இவரைத்தான். இவர் உண்மையுள்ளவர் என்றே நான் கருதுகிறேன்,” என்றாள்.
ரு.
அதற்குப் பிராஸ்பிரோ, "பேசாதே வாளா இரு மேற்கொண்டு வாய் திறந்தால் கடிந்து பேசுவேன். என்ன! இந்தப் போலிப்பயலுக்குத் துணை பேச வருகிறாயா? இவனையும் காலிபனையும் மட்டும் பார்த்ததனால், இவனைவிட நல்லவர் இல்லை என்று எண்ணி விட்டாய் போலும்! அறிவில்லாப் பெண்ணே! காலிபனைவிட இவன் எவ்வளவு சிறந்தவனோ, இவனைவிட அவ்வளவு சிறந்தவர்கள் இருக்கிறார்கள்,” என்றான். மகளுடைய மன உறுதியைப் பார்க்க வேண்டும் என்றே இவ்வாறு அவன் கூறினான். “என்னுடைய அன்பு எளிமையானதே. இவனைவிட அழகானவர்களைப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்பவில்லை,” என்று மிராந்தா விடை பகர்ந்தாள்.
பிராஸ்பிரோ இளவரசனை நோக்கி, "இளைஞனே, என் ஆணையை மீறி நடக்க உன்னால் ஆகாது, என் பின்னே வா” என்றான்.
"ஆம். உண்மைதான்,” என்று பெர்திநந்து கூறினான். பிராஸ்பிரோ வின் மந்திர வன்மையால்! தான் எதிர்க்க வலிமையற்று நிற்பதை அவன் அறியவில்லை. பிராஸ்பிரோவைப் பின்தொடர்ந்து போகுமாறு நேரிட்டது அவனுக்கு வியப்பாக இருந்தது.கண்ணுக் கெட்டியவரைக்கும் அவன் திரும்பித் திரும்பி மிராந்தாவைப் பார்த்துக் கொண்டே போனான்; பிராஸ்பிரோவைத் தொடர்ந்து குகைக்குள் சென்றபோது, “என் புலன்கள் அடக்கப் பட்டிருக்கின்றன. கனவில் இருப்பதுபோலக் கட்டுப்பட்டிருக்கிறேன். இவனோ என்னை அச்சுறுத்துகிறான். நானோ வலிமையற்று இருக்கிறேன். இவற்றையும் நான்