உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

|| - - -

அப்பாத்துரையம் – 37

10. கோமாளி: இறுதிவரை லியருடன் இருந்து உதவியவன்.

பெண்டிர்:

1. கானெரில்: லியரின் மூத்தமகள்; ஆல்பனித் தலைவன் மனைவி.

2. ரீகன்: லியரின் இரண்டாம் மகள்; கார்ன்வால் தலைவனின் மனைவி.

3. கார்டெலியா: லியரின் கடைசி மகள்; பர்கண்டித் தலைவனால் விருப்பப்பட்டும் அரசுரிமையற்றபோது பிரான்சு அரசனால் மணஞ்செய்யப் பெற்றவர்.

கதைச் சுருக்கம்

லியர் பிரிட்டனின் மன்னன். அவனுக்கு மூன்று புதல்வியர். மூத்தவர்களாகிய கானெரிலையும், ரீகனையும் முறையே ஆல்பனித் தலைவனும் கார்ன்வால் தலைவனும் மண னந்து கொண்டனர்; கார்டெலியாவை மணக்கப் பர்கண்டித் தலைவனும் பிரான்சு அரசனும் காத்திருந்தனர்.

லியர் தன் புதல்வியர் அன்பின் அளவிற் கிணங்க நாட்டைப் பங்கிட விரும்பவே, நேர்முகமான புகழ்ச்சியுரைகளால் கானெரிலும் ரீகனும் பெரும்பகுதி நாட்டை அடைய, உண்மையுள்ள கார்டெலியா அவன் சினத்துக்களாகி அனைத்துமிழந்தாள். இந்நிலைமையில் அவளைப் பர்கண்டி துறக்க பிரான்சு அரசன் போற்றி ஏற்று மணந்து கொண்டான்.

லியர் மன்னன் அறியாமையை இடித்துக்காட்டிய உண்மையன் பனான கென்ட் தலைவனும் அவனால் துரத்தப்பட்டான். ஆனால் கென்ட் மீட்டும் உருமாறிக் கேயஸ் என்ற பெயருடன் வேலையாளாய் வந்தமர்ந்தான்.

கானெரிலும் ரீகனும் லியர் மன்னன் படைக்குழுவினரை வீண் சுமையென விலக்கி அவனைக் கடுஞ்சொற்களால் தாக்குவதில் ஒருவரை ஒருவர் போட்டியிட்டனர். அதனைப் பொறாமல் புயலென்றும் பாராது லியர் வெளியேறி வருந்தினன். மன்னனின் கோமாளி அவனையண்டி ஒரு பழங்குடிலிலாயினும் சென்று தங்கும்படி தூண்டினான். ஆனால் லியரின் மனம் மக்கள்