உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ||

கானக்குயிலீர் இசையுடனே பாடீர் எம்முடன் நசையுடனே

தனனத் தன்னத் தானானா

தானாத் தனனா தானானா

தீங்கு செய்யாதீர்! தீங்கான

மந்திர மெதுவுந் தந்தெமதரசி

அப்பாத்துரையம் – 37

நொந்திட எதுவும் நேராதீர்!

இரண்டாம் வனதெய்வம்

வலைபுரி எண்கால் சிலந்திப் பூச்சியீர்

வார்ந்துநும் நூல்கொடு சாராதீர்!

அலைவரி விட்டிலிர்! நத்தையிர்! புழுவிர்!

(பல்லவி)

அரசியின் துயிலினைப் பேராதீர்

கானக்குயிலீர்

இப்பாட்டைக் கேட்டுக்கொண்டே திதானியா உறங்கி விட்டாள். அவள் தோழியரும் தத்தம் வேலையைச் செய்யப் போயினர். அதன்பின் ஓபிரான் ஓசை செய்யாது திதானியா பக்கம் வந்து,

‘விழித்தெழு பொழுதினில் விழிப்படு பொருளே விருப்பினுக் குரிதா விளங்குக பெரிதே'

என்று கூறிக்கொண்டு மாய மலரின் சாற்றை அவள் கண்களிற் பிழிந்தான்.

அதேனியச்

3. காதலர் குழப்பம்

சட்டத்திற்கஞ்சிக் காட்டிற்கு வந்த ஹெர்மியாவும் லைஸாண்டரும் சிறிது தொலைவு நடந்து பின் களைப்புற்று உறங்கினர். அப்போது பக் அவர்களைக் கண்ணுற்றான். ஓபிரான் கூறிய அதேனியக் காதலர் இவர்களே என்று நினைத்து அவன் லைஸாண்டரின் கண்களில் மாய மலரின் சாற்றைப் பிழிந்தான். அதன்பின் அவ்வழியே ஹெலனா