உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

அப்பாத்துரையம் – 37

இமொஜென்: என் பெயர் 4பிடலே என்பது, என் உறவினர் ஒருவர் மில்போர்டு ஹேவனிலிருந்து ரோமிற்குப் புறப்படப் போகிறார். அவருடன் சேரும் நோக்கத்துடன் வருகையில் வழி தப்பி இங்கே வந்தேன்.

பெலாரியஸ்: "நீ மிகவும் உயர்குணமுள்ளவனாகவே காண்கிறாய். நாங்களும் இவ்விடத்திலே வாழ்கிறோமாயினும் காட்டாளர்கள் அல்லேம். இங்கு நீ எங்களுடன் தங்கி உணவுண்டு வாழ்வதில் எங்களுக்கு மகிழ்ச்சியே" என்று கூறிவிட்டுப் பையன்களையும் அவளுக்கு வணக்கம் செய்து நல்வரவு கூறும்படி பணித்தான்.

அம்மூவரும் அதுமுதல் உடன் பிறந்தவராகவே வாழ்ந்து வந்தனர்; (அவர்கள் உண்மையில் உடன்பிறந்தவரே என்பது அவர்களுக்குத் தெரியாது) இமொஜெனும் அவர்களது குகையைத் தன் வீடாக்கி அதில் தனதியற்கைப்படி தூய்மையும் ஒளியும் விளங்கச் செய்தாள். சிறுவர்கள் உணவு அன்று முதல் இமொஜென் கைகளிடமிருந்து இனிமையைக் கடன் வாங்கின. த்தகைய இன்னுணவாலும் இனிய பாட்டுக்களாலும் இளைஞரிருவரும் அவளிடம் மாறாத பற்றுக் கொண்டனர்.

ஆனால் (பிடலே என்று அவர்கள் வழங்கிய) இமொஜென் அவர்களுடன் எவ்வளவுதான் ஆடிப்பாடி நகையாடினாலும், அவள் முகத்தில் பொறுமை என்னுந் திரையால் மறைக்கப்பட்டு மங்கலான துயரின் நிழல் தோன்றுவதை அவர்கள் அடிக்கடி கவனித்தனர். இமொஜெனும், அவர்களிடம் தன் செய்திகள் எவையுங் கூறாமலே பொழுதைக் கழித்தாள். உடல் நலிவெனக் காரணங் காட்டி, அவள் அவர்களுடன் வேட்டைக்குப் போவதைத் தவிர்த்துப் பின் தங்கினாள். உண்மையில் கணவனது நினைவும், காட்டில் அலைந்த அலைச்சலும் அவளுக்குப் பெருநலிவை உண்டு பண்ணின என்பதில் ஐயமில்லை.

மற்றவர்

7. மயக்க மருந்து

வேட்டையை

நாடிச் சென்றபின் இமொஜெனுக்கும் பிஸானியோவிடமிருந்து பெற்ற மருந்தின் நினைவு எழுந்தது. அஃது எல்லாப் பிணிக்கும் மருந்தென அவன் கூறியிருப்பதையும் அவள் ஓர்ந்தாள். ஓர்ந்து அதனைப் பருகி உணர்விழந்து உயிரற்றவள் போல் விழுந்து கிடந்தாள்.