உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168) ||-

அப்பாத்துரையம் - 37

வகுப்பைச் சேர்ந்த ஓதெல்லோ காதலித்து மறைவாய் அழைத்துச் சென்று மணந்து கொண்டான். அது வகையில் உதவிய மைக்கேல் காசியோ என்ற நண்பனைத் தன் படையில் ஓதெல்லோ உயர்பணி தர, அதனால் பகைமையும் பொறாமையும் கொண்ட அயாகோ என்ற படைஞன், டெஸ்டிமோனாவின் மறுக்கப்பட்ட பழங்காதலனும் அறிவிலியுமான ராடெரிகோ என்ற செல்வனை ஏவி அவன் மூலம் இரவில் மறைந்து வெளியேறும் காதலரைப் பிரபான்ஸியோவின் ஆட்களைத் தேடும்படி செய்தான். பிரபான்ஸியோ பேரவையில் ஒதெல்லோ மீது மாயத்தால் தம் மகளை மருட்டியதாகக் குற்றம் சாட்டினான். டெஸ்டிமோனாவின் காதற் சொற்கள் ஒருபுறம், அத்தறுவாயில் ஸைப்பிரஸில் துருக்கிப் படையை எதிர்க்க ஒதெல்லோவின் பணி இன்றியமையாதிருந்தது. மற்றொரு புறம் அவ்வழக்கைப் புறக்கணிக்க வைத்தது. ஓதெல்லோ டெஸ்டிமோனாவுடன் ஸைப்பிரஸ் சென்றான்.

அத்தீவில் முதல்நாள் காவலுக்கு வைக்கப்பெற்ற காசியோ அயாகோ தூண்டுதலால் குடித்து நிலைதவற, அந்த அயாகோ ராடெரிகோ மூலம் மணியடித்து இதனை வெளிப்படுத்திக் காசியோவைப் பணியினின்றும் அகற்றும்படி செய்தான். பின் காசியோவிடம் டெஸ்டிமோனா மூலம் ஓதெல்லோவை மனமிரங்கச் செய்யலாம் என்று தூண்டி, மறுபுறம் அவன் டெஸ்டிமோனாவிடம் மறைவாகப் பேசுகிறான் என்று ஒதெல்லோ மனத்தில் பொறாமையையும் தூண்டினான்.டெஸ்டிமோனாவின் கைக்குட்டையைத் திருடிக் காசியோவிடம் சேர்ப்பித்து அதனையும் ஒரு தெளிவாகக் காட்டிஒதெல்லோவை வெறிப்படுத்த, அவன் டெஸ்டிமோவைக் கொன்றான். அதற்கிடையில் ராடெரிகோவைத் தூண்டிக் காசியோவும் கொல்லப்பட்டான். சாகுமுன் ராடெரிகோ சொற்களாலும், அவன் பையில் இருந்த கடிதத்தாலும், காசியோ தூய்மையும் அயாகோ சூழ்ச்சியும் தெளிவுபட்டுப் போயின. தன் பிழையுணர்ந்து ஓதெல்லோ வாள்மீது வீழ்ந்திறந்தான். அவன் பெருமிதத்தையும், டெஸ்டிமோனா தூய்மையையும் காசியோவின் எளிமையையும் மக்கள் போற்றினர்.