உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

7

அடிகள் அருளியது ஏன் திருஞானசம்பந்தப் பெருமாற்கெதிரில் இறைவன் தோன்றியதை யுணர்த்தியதாகக் கொள்ளுதல் கூடாது? எனத் 'தமிழ்வரலாறுடையார்’ வினாவுகின்றார். திருஞானசம்பந்தர் ஒருவர்க்கன்றி வேறெவர்க்குங் காட்சி தந்திலன் இறைவன் என்பது பெறப்படுமாயினன்றே அவ்வாறு பொருள் கோடல் பொருந்தும்? அடியவரெதிரே தோன்றிக் காட்சிதருதல் ஒருகாலத்தொருவர் பொருட்டன்றிப், பல காலத்தும் அடியார் பலர் பொருட்டும் நிகழ்வதொன்றா கலின் அதற்கவ்வாறு பொருள் கோடல் பொருந்தாதென மறுத்த உரோமச முனிவர்க்குத் திருக்கழுமலத்திற் சிவபிரான் காட்சி தந்ததனைக் குறிப்பிட்டுத் திருஞானசம்பந்தப் பெருமானே திருப்பிரமபுரப் பதிகங்களுள் 'வழிமொழிந் திருவிராகப் பதிகத்தில்' “ஒழுகலரிது” என்னும் இறுதிச் செய்யுளில்,

“முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத் தொழுதுஉலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவும்உரை கழுமலநகர்”

என்று அருளிச்செய்திருத்தலின், அவர்க்குமுற்பட்ட வாதவூரர் அருளிச்செய்திருப்பதும் அவ்வுரோமச முனிவர்க்குக் காட்சி தந்ததனையேயாமென் றுணர்ந்துகொள்க. 'முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி' என்றது உடம்பெங்கும் உரோமம் உடைய உரோமச முனிவரையேயாம். இவ்வுரோமச முனி வரைப்போல் இன்னும் எத்தனையோ அடியவர்க்கும் இறைவன் அக் கழுமலத்திற் காட்சி தந்திருக்கலாமாகலின். காட்சி கொடுத்த லாகிய பொது நிகழ்ச்சியைத் திருஞானசம்பந்தர் ஒருவர் பொருட்டாக மட்டும் நிகழ்ந்ததாகவைத் துரைகூறுதல் குற்றமாமென்க. மற்று, ‘நரியைக் குதிரை யாக்கியதோ’ அங்ஙனம் பொதுநிகழ்ச்சியாகாமல், மாணிக்கவாசகர் ஒருவர் பொருட்டே நிகழ்ந்ததொன்றாகையால் அதனைப் பொதுவாக வைத்து உரை கூறுதலுங் குற்றமா மென்க. இங்ஙனமே "செந்நாவர்பரசும்”, "மண்சுமந்தபாடல்” என்னுஞ் செய்யுட் பொருள்களும் பொது நிகழ்ச்சியாயிருத்தலின் இவற்றையும் ஒவ்வொருவர்மேல் வைத்து உரையுரைக்க முயலல் ஏலாதென்க. இவ்வாறு பொதுப்பட நிற்பவற்றிற்குச் சிறப்பாகவும், சிறப்பாக நிற்பவற்றிற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/16&oldid=1588200" இலிருந்து மீள்விக்கப்பட்டது