256
அப்பாத்துரையம் - 37
இருக்கும் நகரில் இராது வேறெங்கே போய் இருக்கமுடியும்? அவள் இருக்குமிடம் அவனுக்கு விண்ணுலகம் அவள் இல்லாத இடம் மண்ணுலகுகூட அன்று; நரகம்கூட அன்று; அதனினுங் கொடிய உலகமேயாம். இதில் வாழ்வதை விட இறப்பதே மேலேன்று துணிவுறலானான். அப்போது அத்துறவி, 'என்ன கூர் அறிவு உனக்கு? நீ உன் காதலியை விட்டுச் சற்றுத் தொலைவில் செல்ல அஞ்சி இறந்தாயானால் உன் உயிரை இழந்து ஜூலியட் எப்படி வாழக்கூடும்?' என்றார். முதலில் இதை எண்ணிப் பார்க்காத ரோமியோ பின்னும் மனங்கலங்கி, 'அந்தோ! அங்ஙனமாயின் நான் என்னதான் செய்வது? வாழவும் வகையில்லை; மாளவும் வகையில்லையே; நீர்தாம் ஒரு வழிகாட்டுவீர்!’ என்றான்.
அருளும் அறிவும் நிறைந்த அத்துறவி சிலநேரம் ஆழ்ந்து எண்ணமிடலானார். அதன்பின் தெளிந்து, 'நான் கூறுகிறபடி கேள். இன்றிரவு இன்றிரவு இறுதியாக ஜூலியட்டைக் கண்டு விடைபெற்றுக் கொண்டு மாந்தவா" நகரத்துக்குச் சென்று உறைவாயாக. அதன்பின் நான் வேளை நயமறிந்து தலைவருக்கும் நகர மக்களுக்கும் உங்கள் மணச்செய்தியை அறிவித்துச் சேராத இரு குடியினரையும் சேரவைப்பேன். அதன்பின் நீ வந்து நகரறிய அவளை மனைவியாகப் பெற்று வாழலாம்' என்றார். ரோமியோவுக்கு இது பொருத்தமாகவும் நலமாகவும் பட்டபடியால்,அதன்படியே நடக்க இசைந்தான்.
ஜூலியட்டின் தோழியர் சிலரது துணையால் அன்றிரவு ரோமியோ அவளது மாளிகையுள் அவளைத் தனிமையாகக் கண்டு உறவாட முடிந்தது. முதல்முதல் அம்மாளிகையில் அவர்கள் கூடியபோது அக்கூட்டுறவு மாசுமறுவற்ற காதலின்பமாகவே இருந்தது. இப்போது பிரிவுத் துன்பத்துடன் அது கலந்து துன்பமோ இன்பமோ என்று கூறமுடியாத நிலையிலிருந்தது. அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசக்கூட முயன்றிரார்.அதற்குமுன் விடிந்து விட்டதுபோல் அவர்களுக்குத் தோன்றியது. கடையாமத்துக் கோழி கூவின போது ரோமியோ திடுக்கிட்டான்; இரண்டாம் யாமமே' என்றாள். வெளியே வந்தபோது விடிவெள்ளியைக் கண்டு நேரமாயிற்றென அவன் கலவரப்பட்ட போது, அவள் 'அது விடிவெள்ளியன்று; அது