உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

அப்பாத்துரையம் - 37

ரிச்சர்டு தன் வலிமையின்மை தோன்றுமாறு சினத்தால் பலவாறு அவனிடம் பேசி ஹென்றியை அழைத்து வருமாறு கூறினான். நார்தம்பர்லந்து மூலம் இதை உணர்ந்த ஹென்றி பிளின்ட் கோட்டைக்க வந்து நின்று அரசன் தன்னை வந்து பார்க்குமாறு மீண்டும் நார்தம்பர்லந்தை ஏவினன். ரிச்சர்டு வந்ததும் அவனை ஹென்றி பணிந்தான். அதுகண்ட ரிச்சர்டு தன் சினம் வெளிப்படப் பலவாறு பேசி, 'உமக்கு உரியதையும் தந்தேன்: என்னையும் தந்தேன்' என்று கூறினான். ஹென்றி ரிச்சர்ட்டைக் கொண்டு படையுடனும், துணைவருடனும் லண்டன் நோக்கிச் சென்றான்.

லண்டர் வெஸ்ட் மின்ஸ்டரை யடைந்தும் ரிச்சர்ட்டேமன வெறுப்புற்று, “என் முடியை உம் தலைவர் ஏற்பாராக!" என்று நார்தம்பர்லந்திடம் கூறினான். ஹென்றியும் முடிசூட்டப் பெற்றான்.

ரிச்சர்டு சிறையில் வைக்கப்பட்டான். அவன் மனைவி மடத்தில் சென்றுறைந்து சின்னாளில் உயிர் நீத்தாள்.

யார்க் கோமகன் மகன் திரும்பவும் ரிச்சர்டை அரசனாக்க முயன்றான். இதை யாக் கோமகனே ஹென்றிக்குக் காட்டிக் கொடுத்தான். பின் ஹென்றியின் நண்பர் மூவர் ரிச்சர்டை வலியச் சண்டைக்கிழுத்துக் கொன்றனர்.

ஆயினும் ஹென்றி தனக்குற்ற மாசு துடைப்பானாய் அம்மூவரையும் வெறுத்துத் தூக்கிலிட்டான்; யாக் கோமகன் மகனையும் மன்னித்து விட்டான்.

இங்ஙனம் முடிவில் ரிச்சர்டின் குணமே மேலோங்கி விளங்கிப் புகழ்பெற்றது.

1. மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன் துவர்க்கும் பின் இனிக்கும்

மனிதன் சிறப்புகளுட் பல அவனது இன்ப வாழ்வினுட் காணா விடினும், துன்ப வாழ்வில் காணப்படுவது உறுதி. துன்ப வாழ்விலும் சிறப்படையாதவன் கீழ் மகனேயாவான்.

'இரண்டாம் ரிச்சர்டின் வாழ்வு இவ்வுண்மைக்கு ஒரு சான்று ஆகும். மணிமுடியுடன் மாநிலம் ஆளுங் காலையில், அவன்