உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

2

19

ஆசிரியர்

பெருவேந்தன் தான் சிவபிரானிடத்தே அன்புடையனா யிருந்தும் தனது தலைநகராகிய வஞ்சியிற் பெரிய பௌத்தப் பள்ளிகள் ருக்க இடந் தந்தமையும், அவன் றம்பியும் 'சிலப்பதிகார' ஆசிரியருமாகிய இ ளங்கோவடிகளும், அவ்விருவர்க்கும் நண்பரான 'மணிமேகலை கூலவாணிகன் சாத்தனாரும் பௌத்த சமயத்தைத் தழுவி நின்றமையும், அங்ஙனமாயினும் அவ்விருவரும் சிவபிரானைச் சொல்லும் டங்களில்ெலாம் அவரை உயர்த்துச் சொல்லுதலும் சான்றா மென்க. இவ்வாறு தமிழ்நாட்டினுள் எங்கணும் மகாயான பௌத்தமே பரவியிருந்ததனால் அதற்குரிய பௌத்த குரவர்க்கும் சைவசமயாசிரியரான மாணிக்கவாசகர்க்கும் ஏதும் வழக்கு நேர்ந்தில தென்பது மற்று. இலங்கையிலிருந்த பௌத்தமோ சூனியவாதங் கடைப்பிடிக்கும் ‘ஈனயான பௌத்தமே' யாகலின், அதற்குரிய பெளத்த குரவரே சைவசமயத்திற்கும் முற்றும் மாறாய் நிற்கலானார்; அதனாற்றான், அவர் இலங்கையினின்றுந் தில்லைக்குப் போந்து அடிகளோடு வழக்கிட்டனரென் றுணர்ந்து கொள்க.

இனிச், சைவசமயத்தைத் தழுவிய மகாயான பௗத்தம்'கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மெல்லமெல்ல லங்கையினுள்ளும் நுழையலாயிற் றென்பதற்கு கி.பி. 263

முதல் 285 வரையில் இலங்கையில் அரசாண்ட

காரிகதிஸ்ஸன்' தனது சமயக் கொள்கைக்கு மாறான 'வேதுல்யமதத்’தை அடக்கித், தனது மதத்தினையே விளங்கச் செய்தனனென்று ‘மகாவம்ஸம்’ 'மகாவம்ஸம்' 'கூறுதலே சான்றாம். இவ் 'வேதுல்யமதம்' என்பது சிலகால் ‘வைதுல்யம்' என வழங்கப் படுமெனவும், அதனைக் கூறுஞ் சூத்திரங்கள் வடக்கேயுள்ள 'மகாயான பௌத்தத்’தைச் சேர்ந்தவாமெனவும் அதனை நன்காய்ந்தோர் கூறாநிற்பர்.

கி.பி.302முதல்

இனிக், கி.பி. 302 முதல் 315 வரையில் இலங்கையை யாண்ட 'கோடாபயன்' அல்லது 'மேகவண்ணா பயன்' காலத்தில் அபயகிரி விகாரத்திலிருந்த அறுபது புத்தகுருமார் (பிக்ஷுக்கள்) வேதுல்ய மதத்தைத் தழுவினரென்றும், அதனால் அவ்வரசன் அவர்களை இலங்கையினின்றுந் துரத்தவே அவ்வறுபதுபேரும் சோழ நாட்டுக்கு ஏக, அங்கிருந்த ‘சங்கமித்தன்' என்னும் புத்தகுரு ஒருவர் அவ் வறுபதுபேருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/28&oldid=1588258" இலிருந்து மீள்விக்கப்பட்டது