உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் - 23

முந்தியோதான் வடமொழிச் சிவஞானபோதம். மெய்கண்ட தேவர் அருளிய 'தமிழ்ச் சிவஞான போதத்'தினின்றும் மொழிபெயர்த்து வட மொழியிற் செய்யப்பட்டதா மென்பது நன்கு பெறப்படும். வடமொழிச் சிவஞானபோதத்தின் பன்னிரண்டாஞ் சூத்திரத்து இறுதியில், “ஏவம் வித்யாச் சிவஜ்ஞாநபோதே சைவார்த்த நிர்ணயம்" எனப் போந்த குறிப்பானது 'இங்ஙனமாகச் சிவஞானபோதம் என்னும் நூலிற் சைவப்பொருள் உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது' என்று பொருள் தந்து நிற்றல் கொண்டு, வடமொழியில் அதனை மொழிபெயர்த்துச் செய்தவர் உண்மையை மறையாமல் தாம் மொழிபெயர்த்து உரைத்த சைவசித்தாந்தப் பொருள் முன்னரே சிவஞானபோதத்திற் சொல்லப்பட்டிருக்கின்றதெனத் தெளிவுறக் கூறினமையே யாங் கூறும் உண்மைக்குச் சான்றாம்.

தமிழைப் பார்த்து வடமொழியில் மொழிபெயர்த்தவரே உண்மையை ஒளியாமற் சொல்லியிருக்க, உண்மை யாராய்ச்சிக்குக் கட்டுப்படாமல், “யாம் பிடித்த முயலுக்கு மூன்றேகால்” என அழிவழக்குப் பேசுவாரை யொப்பப் பார்ப்பனர் சிலரும் அவர் வழிப்பட்ட தமிழ்ப் புலவர் சிலரும் தாங்கூறுதற்குப் பழைய சான்றுகள் காட்டாது போதலோடு அமையாது. “ஏவம் வித்யாச் சிவஜ்ஞான போதே" என மேற்காட்டிய குறிப்புக்கு இங்ஙனமாக இந்தச் சிவஞான போதத்தில்' என்று அக் குறிப்பில் இல்லாத 'இந்த’ எனும் ஒருசொல்லை வருவித்து, 'ஈண்டுச் சிவஞானபோதம் என்றது பன்னிரண்டு சூத்திரங்களிற் கூறிய இந்த வடமொழிச் சிவஞான போதத்தையே' எனப் பொருந்தாப் பொருளும் உரைத்தார்.

வடமொழியில் அதனை ஆக்கினோர் தாம் ஆக்கிய அதனையே 'இந்தச் சிவஞானபோதம்' என்று கூறல் வேண்டினராயின் ‘இந்த' என்னும் பொருளைத் தருவதாகிய ஏதஸ்மிந்' என்னும் வடசொல்லை அதனொடு கூட்டி, ஏதஸ்மிந் சிவஜ்ஞான போதே' என்று சொல்லியிருப்பர்; மற்று, அவர் அச்சொல்லைக் கூட்டாது வாளாது 'சிவஞானபோதம் என்னும் நூலில்' என்று பொருள்படும் 'சிவஞானபோதே’ என்னுஞ் சொல்லைமட்டுங் கூறிச்சென்றாராகலின், அங்ஙனம் ஆக்கியோன் கருத்துக்கு மாறாக 'இந்தச் சிவஞானபோதம்' என்று பொருள் உரைப்பாரது போலியுரைப் பொய்ம்மையைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/77&oldid=1588348" இலிருந்து மீள்விக்கப்பட்டது