உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மறைமலையம் - 23 *

என்னுஞ் சிறப்புப்பெயரும் வழங்குவதாயிற்று. இவன் தனது தலைநகராகிய காஞ்சியில் தன் முன்னோரால் அமைக்கப் பட்ட ‘பரமேச்சுர விண்ணகரம்' என்னுந் திருமால் திருக்கோயிலுக்குப் பல சிறப்புகளும் செய்து திருமால் திருவடிக்கண் மெய்யன்புடைய னாய் ஒழுகி வந்தமை பற்றியே, திருமங்கை யாழ்வார் தாம் இயற்றிய ‘பரமேச்சுவர விண்ணகரப் பதிகத்தில்’ இவன்றன் அன்பினையும் வெற்றித்திறங்களையும் வியந்து பாடினர். ஆயினும், திருமங்கையாழ்வார் இம் மூன்றாம் நந்திவர்மன் காலத்தவர் அல்லர்; அவனுக்கும் பிற்பட்ட காலத்தே தான் இருந்த வராவர்; யாங்ஙனமெனின், 'நந்திரபுர விண்ணகரப் பதிகத்தில்,

“நந்திபணி செய்தநகர் நந்திரபு விண்ணகரம் நண்ணுமனமே

எனவும், பரமேச்சுர விண்ணகரப் பதிகத்திற், “பல்லவன் மல்லைர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே

எனவும், 'செய்த, “பணிந்த” என்னும் இறந்தகால வினைச் சொற்களைப் பெய்து, அவ் வேந்தன் தமது காலத்திற்கு முன்னிருந்தோனென்பதை விளங்கவைத்தமையால் திருமங்கை யாழ்வாரது காலம், மூன்றாம் நந்திவர்மனது இறுதிக்காலமாகிய கி.பி. 854 ஆம் ஆண்டுக்கும் பிற்பட்ட தென்பது பெற்றாம்.

அற்றேல், ‘தெள்ளாற்றெறிந்த நந்திவர்ம’னுக்கும் அவரது காலம் எவ்வளவு பிற்பட்டதெனின், அதனையும் ஒருசிறிது காட்டுதும்: திருமங்கையாழ்வார் தாம் பாடிய ‘அட்டபுயகரப் பதிகத்தின்'இறுதிச் செய்யுளில்,

"மன்னவன் தொண்டையர்கோன்

வணங்கும் நீண்முடி மாலை வைரமேகன்

தன்வலி தன்புகழ சூழ்ந்தகச்சி

அட்டபுயகரத்து ஆதிதன்னை’

என்று தமது காலத்து அரசுபுரிந்த ‘வைரமேகன்' என்னும் பல்லவ அரசனைக் குறிப்பிட்டிருக்கின்றார். இச்செய்யுளிற்போந்த இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/227&oldid=1588681" இலிருந்து மீள்விக்கப்பட்டது