உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

  • மறைமலையம்

23

சிவபிரான்றன் முழுமுதற் றன்மையும், அவன் தன்னை வேண்டிக் குறையிரந்த அடியார்க்கு அக்குறை முடித்தமையும் பல விடங்களிற் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்பகுதிகளிலுங்கூட இடை யிடையே விஷ்ணுவையுங் கண்ணனையும் உயர்த்து உரைக்குங் கதைகள் சிலவற்றை வைணவர்கள் நுழைத்தனா ராயினும், அவர் நுழைத்த அக்கதைகள் பாரதத்திற்கும் மிக முற்பட்ட பிராமணங் களினும் வேத நூல்களினுங் காணப் படாமையானும், மற்றுச் சிவபிரான்றன் இறைமைத் தன்மையை நாட்டுங் கதைகளே மிகப்பழைய அந் நூல்களினெல்லாங் காணப்படுதலானும் விஷ்ணுவையுங் கண்ணன் இராமனையும் உயர்த்த முனைந்த கதைகள் பிற்காலத்துப் போந்த வைணவர் களாற் புதிது புனைந்து புகுத்தப்பட்டனவாதல் தேற்றமாம். இம் மாபாரதத்துட் சிவபிரான்றன் தனித் தலைமைத் தன்மையை நாட்டும் பகுதிகளுட் சில ஈண்டெடுத்துக் காட்டுதும்:

பகைவராற் பெரிது காக்கப்படுஞ் சயத்திரதனைக் கோறல் ஏலாமைகண்டு நெஞ்சங் கலங்கிய அருச்சுனனைக் கண்ணன் தேற்றிச் சிவபிரான்மாட்டுப் பாசுபத பெறுகவென அவனை ஏவி, அவனுந் தானுமாக நுண்ணுடம்பில் திருக்கை லாயஞ் சென்று அப் பெருமானை வணங்கிவாழ்த்தி அது பெற்று மீண்ட மை துரோணபருவத்திற் சொல்லப் பட்டிருக்கின்றது. அவ் விருவரும் இறைவனை வழுத்துகையிற் “சிவபிரான் எல்லாப் பொருள்கட்கும் உயிராவன், எவற்றையும் படைப்பவன் எவற்றிலும் ஊடுருவி நிற்கும் முதல்வன்" (விச்வாத்மநே விக்வஸ்ருஜேவிச்வம் ஆவ்ருத்ய திஷ்டதே) என்று பரவினர்.

அநுசாசனபவருத்திற், கண்ணன்

சிவனடியாரான

உபமந்யுமுனிவர்க்குச் சீ னாகி அவர் அறிவுறுத்த மொழிப்படியே, ஒரு திங்கள் கனிகளையே அயின்றும் நான்கு திங்கள் நீரையே அருந்தியும் ஒற்றைக் கால்மேல் நின்று இரண்டு கைகளையும் உயரவெடுத்துந் தவம்புரியச் சிவபிரானும் அம்மையம் அவற்கெதிரே தோன்றினாரெனவும், அப்போது இந்திரனும் விஷ்ணுவும் பிரமனும் ரதந்தர சாமத்தைப் பாடிக்கொண்டு சிவபிரானைத் தொழுதபடியே அவரோடு உடன்வந்தனரெனவும், அக் காட்சியினைக் கண்ட கண்ணன் சிவபிரான்றன் இறைமைத் தன்மைகளைப் பலவாறு எடுத்துரைத்து வணங்கி அப்பனிடத்து எட்டு வரங்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/241&oldid=1588696" இலிருந்து மீள்விக்கப்பட்டது