உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

  • மறைமலையம் - 23

இனி,மேற்காட்டிய வாணன்போரிற் சிவபெருமானைத் தொடர்புபடுத்திய கதை வைணவராற் புதிது படைக்கப் பட்டதாதல் போலவே, பரசுராமனைத் திருமாலின் அவதாரமெனக்கொண்டு, அவன் அரசர் கூட்டத்தினை இருபத்தொருமுறை அழித்தான் என்னுங் கதையுங் கி.பி. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டிற்குப்பின் பார்ப்பனராற் பொய்யாகப் புதிது கட்டப்பட்ட தொன்றாகும். ஏனெனில், மாபாரதத்திற் பரசுராமனைப் பற்றிக் கூறும் பகுதிகளில் ஓரிடத்தாயினும் அவன் திருமாலின் அவதாரம் என்பது குறிப்பாலாயினும் வெளிப் படையாலாயினுங் கூறப்பட வில்லை.28 அதுவேயுமன்றி, மாபாரதம் 178 முதல் 180ஆம் இயல்வரையிற், கிருதவீரிய அரசன்பால் அளவிறந்த பொற் குவைபெற்ற பிருகுமுனிவர் குடும்பத்தினர், அவ்வரசனுக்குப் பின் அவன் வழிவந்த மன்னர் பொருளின்றி வறுமைப்பட்டு அப் பிருகுகுடியினர் பாற்சென்று தமக்குச் சிறிது பொருளுதவி செய்யும்படி வேண்ட, அவர்கள் அப்பொருளிற் பெருந்திரளை நிலத்தின்கீழ் மறைத்து வைத்தும் எஞ்சிய சிலவற்றைத் தமக்கு உறவினரான பார்ப்பனரிடம் கொடுத்தும் அம்மன்னர்களை ஏமாற்ற அம்மன்னருள் ஒருவன் நிழத்தின்கீழ்ப் புதைத்துவைத்த அப்பொருட்டிரளில் ஒருகூறு கண்டெடுக்க, ஏனை மன்னர்கள் முனிவர்களின் படிற்றொழுக்கத்தைக் கண்டு சினந்து அவர்களைக் கொன்று வீழ்த்த, அம் முனிவரின் மனைவியருள் ஒருத்திக்குப் பிறந்த ஔர்வன் என்பான் அம் மன்னர்களை வேரோடு அழிக்க முனைந்தும் அஃதியலாதான செய்தியைப் பராசரர்க்கு அவர்தம் பாட்டனார் எடுத்துக்கூறுகின்றுழிப், பரசுராமனைப் பற்றியாதல் அவன் இருபத்தொரு தலைமுறை அரசரை யழித்தமை பற்றியாதல் சிறிதும் உரை யாமையால், அவனையும்அவன் அரசரை யழித்தமையுங் கூறும் பகுதிகளை, வேளாள அரசர்மேற் பகைகொண்ட பார்ப்பனர்கள் அவர்களை அச்சுறுத்தும் பொருட்டுப் புதியவாய்ப் படைத்து அவற்றை மாபாரதத்தின் பிற்பருவங்களில் நுழைத்து விட்டாரென்று தெளிக.”

மேலே, ‘திவாகரம்' என்னும் தமிழ்நிகண்டு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தொன்றென்று காட்டினே மாயினும், அதன் முதற்கண்ணதாகிய 'தெய்வ்ப்பெயர்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/255&oldid=1588712" இலிருந்து மீள்விக்கப்பட்டது