உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

  • மறைமலையம் - 23

“வென்றி மாமழு ஏந்திமுன் மண்மிசை

மன்னரை மூவெழுகாற்

கொன்ற தேவநின் குரைகழல் தொழுவதோர்

வகையெனக் கருள்புரியே”

எனப் பரசுராமனையும்,

66

எனக்

வையங் காக்குங் கடும்பரிமேற் கற்கியை நான்கண்டு கொண்டேன்”

கற்கியவதாரத்தையம்

ஒருகாலன்றி

(5, 3, 1)

(2, 5, 3)

பலகாலும்

பாடிவழுத்திய திருமங்கையாழ்வார் கி.பி.பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலன்றி அதற்குமுன் இருந்தவராதல் பெறப்பட மாட்டாதென்க. ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் பாட்டுக்க ளையும் யாம் கருத்தூன்றி ஆராய்ந்து பார்த்த அளவிற், பரசுராமனையுங் கற்கியையுந் திருமாலின் அவதாரங்களாகக் கொண்டு வணங்கிப் பாடிய பாட்டுக்கள் திருமங்கையாழ்வார் பாடல்களிலும் பெரியாழ்வார் சடகோப ஆழ்வார் பாடல்களிலும் மட்டுமே காணப்படுகின்றன. பெரியாழ்வார்,

"மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்

(4, 9, 9)

எனப் பலராமன் பரசுராமன் இராமன் என்னும் மூவரையுங் கற்கியையுங் குறிப்பிட்டனர். சடகோபர்,

“நின்றிலங்கு முடியினாய் இருபத்தோர்கால் அரசுகளைகட்ட வென்றிநீண் மழுவா

எனப் பரசுராமனையும்,

“மீனா யாமையுமாய் நரசிங்கமுமாய்க் குறளாய்க்

கான்ஓர் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னங்கார்வண்ணனே

எனக் கற்கியையுங் குறிப்பிட்டார்.குலசேகர ஆழ்வார்

66

'முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி

அவன் தவத்தை முற்றும் செற்றாய்"

(6, 2, 10)

(5, 1, 10)

(9,9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/257&oldid=1588714" இலிருந்து மீள்விக்கப்பட்டது