உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 39

222 || அருகே வந்தனர். அவர்கள் கையில் கயிறும் கழிகளும் இருந்தன. இவற்றைப் பாரத வீரன் பாசப் படை, சூலப் படைகளாகக் கருதினான்.

அருகிலுள்ள ஆட்டெதிரிகள் அகன்ற பின், பாரத வீரன் வில்லும் அம்பும் எடுத்துப் போரிட்டான். இதனால் ஆயர்கள் அருகில் வர முடியவில்லை. தொலைவிலிருந்தே கல்லும் கம்பும் எறிந்தனர். ஆயர்கள் நெடுந்தொலை செல்லாதது கண்டு, பாரத வீரன் வில்லைக் கீழே எறிந்தான். உலாவிலேயே முதல் தடவையாக அவன் வெடிப்படையை எடுத்தான். அது போருக் குரிய வெடிப்படை அல்ல, ஆனாலும் மந்தைகளிலும் ஆயர் குழுவிலும் அது அச்சமும் பெருங்கிலியும் உண்டு பண்ணிற்று.

எதிர்த்து அவனை வெல்லும் ஆற்றல் அவர்களுக்கில்லை. ஆனால் அவர்களில் சிலர் இறந்த ஆடுகளின் திரளிடையே ஊர்ந்து வந்தார்கள். தொலைவிலிருந்து இதைக் கண்ட பட்டி மந்திரி, பாரத வீரனைத் தொலைவிலிருந்தே எச்சரிக்க முயன்றான். ஆனால் அவனருகில் ஓடி வந்த சில ஆயர்கள் அவனைப் பிடித்துக் கட்டி உருட்டினர். கூச்சலிட முடியாதபடி வாயில் துணிவைத்தடைத்தனர். பாரத வீரனையும் பின்னிருந்து அவர்கள் திடுமெனச் சூழ்ந்தனர். வெடிப் படையை உதறி விட்டு அவனையும் கட்டினர்.

இதற்குள் சிதறிப் பரந்து நின்ற ஆயர்கள் அனைவரும் திரண்டனர்.நடந்த குருதிக்களரியைக் கண்டும் கேட்டும் அவர்கள் சீற்றம் பெருக்கெடுத்தோடிற்று. கட்டுண்ட வீரனையும், பாங்கனையும் அவர்கள் ஆத்திரங் கொண்டு அடித்தனர், குத்தினர், உதைத்தனர். அவர்கள் இறந்து விட்டனர் என்ற எண்ணம் ஏற்பட்ட பின்னரே, கட்டை அரைகுறையாக அவிழ்த்து விட்டுத் தம் வழியே சென்றனர்.

தம் வாழ்வு இத்துடன் முடிவுற்றது என்றே வீரனும் பாங்கனும் கூட எண்ணினர். காயங்கள் உடலில் குறைவாக இருந்தன. ஆனால் உடலின் ஒவ்வொரு பகுதியும் கன்னிப் புடைத்துக் குருதி கக்கிக் கொண்டிருந்தது. பட்டி மந்திரியின் பருத்த உடல் பின்னும் பருத்து வீங்கி இருந்தது. உடலின் எரிவாலும் நோவாலும் அவர்கள் இரவெல்லாம் புரண்டு புரண்டு துடித்தனர்.