உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அப்பாத்துரையம்

அதுகேட்ட அந்தோணி சரி, அப்படியாயின் உன்முடிவு என்ன?” என்றான்.

அவள், "உங்கள் உடலுடன் என் உடலைச் சேர்த்து உங்கள் உயிருடன் என் உயிரும் உடன் வரச்செய்வதே' என்றாள்..

அவள் காதலின் உயர்வையும், அதன் முழுவலியையும், அதன் வீற்றையும் அன்றுதான் அவள் கண்டான்.

அவன் முகம் எல்லையில்லாத பேரின்பக் கதிர் வீசி ஒளிர்ந்தது. அவ்வொளி கண்டு கிளியோப்பாத்ராவும் காதற் கடலின் கரை கண்டவளானாள். அவள் “இனிப் பிறப்பு இறப்பும் இன்பதுன்பமும் மாறி மாறி அலைபோல் வந்து வந்து மோதும் இவ்வாழ்க்கைக் கடலைக் கண்டு நான் மலைவடையேன். என் அந்தோணியே அரிய அந்தோணியாகக் கொண்டு அதனைக் கடப்பேன்” என்று கூறி அவனைத் தழுவி முத்தமிட்டாள்.

வாழ்க்கை முற்றிலும் பிறர் அடையும் இன்பத்தினும் அவ்வொரு நொடியில் அவர்கள் அடைந்த இன்பம் பெரிதென்னலாம்.

அந்தோணி கிளியோப்பாத்ராவை அன்று மணந்த மணமகளினும் உயர்வாக எடுத்துணைத்து முடிநீவி, “இறைவன் உன்னைக் காக்க! உன்னால் பிறவியின் பயன் பெற்றுவிட்ட எனக்கு இனி என்ன குறை? உன் காதல் நிறைவுடன் மாளக்கிட்டிய இம்மாள்வு வாழ்வினும் நிறைவுடையது! இன நான் ரோமனாக நின்று உயிர்விட வேண்டும். நீயும் டாலமிகளின் வழித்தோன்றல் என்ற தகுதிக்கும் ரோமன் காதலி என்ற தகுதிக்கும் இணங்க நிறைவாழ்வெய்துவாய்! காதற் கடவுளின் பாதுகாப்புக்கு உன்னை

டுத்துச் செல்கின்றேன்" என்று கூறி அவளை விட்டகன்று வெளியிடம் சென்று தன் வாளாலேயே தன்னை மாய்த்துக் கொண்டான்.

அவன் இறந்தது கேட்ட கிளியோப்பாத்ரா உயிரிழந்த உடல்போல் செயலற்று நின்றாள். பின் தேறித் தன் காதற் கட னாற்ற எண்ணுமளவில் ஸீஸரின் தூதன் வந்து பலவகை இனிய மொழிகளால் அவளை வயப்படுத்த முயன்றான்.அவள்