உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

91

கியூப்பிட் வருத்தத்தோடு அதற்கு இணங்கினான். அதனால் ஏதேனும் துன்பம் ஏற்படக் கூடும் என்று அவன் அஞ்சினான். ஆயினும், அவள் விருப்பத்தை மறுக்க அவனுக்கு மனமில்லை. அவன் அதற்கு ஒருவாறு இணங்கிய மறுநாள் அவள் அக்காள்மார் இருவரும் அம்மாளிகைக்கு வந்தனர். அம்மாளிகையின் அழகையும் அங்கிருந்த பெருஞ் செல்வத் தையும் கண்ட அவர்கள் பெருவியப்பும் திகைப்பும் அடைந்தனர். அவர்கள் போகும்போது சைக்கீ அவர்களுக்கு ஏராளமான பரிசுகளை வழங்கினாள். ஆனால், அக்காள்மார் இருவரும் பேராசையும், பொறாமையும் கொண்டனர். அவர்கள், எப்படி இவ்வாழ்வு தங்கள் தங்கைக்கு வந்தது என்பதை அறியத் துடித்தனர். அதிலும், சைக்கீ தன் கணவனைக் கண்ணால் பார்த்ததில்லை என்பதைக் கேட்டபின், அவர்கள் ஆவல் அடங்காததாயிற்று.

இதற்கிடையில் சைக்கீ என்னவானாள் என்பது வீனஸ் தெய்வத்துக்குத் தெரிந்துவிட்டது. சைக்கீ மீது அவள் கொண்டிருந்த சினம் பெருஞ்சீற்றமாகக் கொழுந்துவிட்டது. எனவே, அவள் சைக்கீயின் கனவில் ஒரு கெட்ட நினைப்பைப் புகுத்திவிட்டாள். தன் அக்காள்மார் இருவரையும் மீண்டுங் காணவேண்டும் என்ற நினைப்பு சைக்கீக்கு ஏற்பட்டது.கியூப்பிட் வருத்தத்தோடு அதற்கு இணங்கினான். அவர்களும் மறுநாளே சைக்கீயைப் பார்க்க வந்தனர்.

பொறாமை மிக்க அவர்கள் இருவரும் முகவாட்டத்துடன் இருப்பதாகக் காட்டிக்கொண்டனர். தங்கள் தங்கையைப் பற்றி அவர்கள் மூதறிஞர் ஒருவரிடம் தெரிவித்ததாகவும், அதைக் கேட்ட அவர், சைக்கீயின் நிலையைக் குறித்து வருந்தி, அவளை ஒரு கொடிய பூதம் மணந்திருக்கிறதென்றும், அதன் உண்மை உருவம் கொடிய நச்சுப்பாம்பின் கோர உருவமாக இருக்கு மென்றும் விடை கூறினதாகவும் அவர்கள் சொன்னார்கள். அக்கொடியவனின் உண்மை உருவத்தைக் காண்பதற்கு ஒரு மாயவிளக்கைப் பெற்றுவந்திருப்பதாகவும், அவனை ஒரே குத்தில் கொன்றுவிடக்கூடிய மாயக்கத்தி ஒன்றையும் அம்முதியவர் அளித்திருப்பதாகவும் அந்த நயவஞ்சகத் தமக்கையர் சைக்கீயிடம் தெரிவித்தார்கள். சைக்கீ அன்றிரவே அவ்விளக்கால் அவன்