உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

193

அரசன் அன்றிரவு அதன் வீட்டில் தங்கிச் செல்லலா மென்று அனுமதியளித்த ஓணான் அவனை எதிர்கொண்டழைக்க வந்தது; ஆனால், அது அதன் வழக்கமான ஓணான் உருவத்தில் வரவில்லை. சரிகைப் பட்டாடைகள் அணிந்து, தாதியர் புடைசூழ ஒரு சீமாட்டி வடிவத்துடன் வந்தது. அரசன் வரவால் தன் வீடு பெருமை பெற்றதென்று பணிவுடன் அறிவித்து, அரசனுக்கு உதவி செய்யக் கிடைத்த வாய்ப்பிற்கு மகிழ்ச்சி தெரிவித்து அச்சீமாட்டி அரசனுக்குப் பெரு விருந்து ஒன்று நடத்தினாள்.

பாட,

அவ்வளவு உபசாரத்துடன் வரவேற்புக் கிடைத்ததால் மகிழ்ந்த மன்னன், அழகான பூங்காவையும் பழத்தோட்டத்தையும் மரச் சோலையையும் மாளிகையையும் சுற்றிப் பார்த்து, விருந்து மண்டபத்தில் பொன் வட்டில்களை ஏந்திப் பல நூறு ஆட்கள் பரிமாற, எண்ணற்ற இளமங்கையர்கள் இசை அறுசுவையுண்டியுடன் விருந்துண்டு மகிழ்ந்தான். அவன் அரண்மனையில்கூட அவ்வளவு அரிய விருந்து நடந்ததில்லையே என்று வியப்புற்றான். அவைகளை எல்லாம் விட, அரசன் மனதைக் கவர்ந்தது பச்சைக்கிளியின் பேரெழில்தான். சீமாட்டி உருவத்திலிருந்த தன் வளர்ப்புத் தாயான ஓணானின் பக்கத்தில் ஒய்யாரமாக வீற்றிருந்து கொண்டு பச்சைக் கிளி அவ்விருந்துக் கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வந்தாள்.

ஓரிரவு தங்கிச் செல்ல வந்த அரசன் அந்த அழகான மாளிகையில் ஒரு வாரம் முழுவதும் தங்கியிருந்து, போக மனமில்லாமல் விடைபெற்றுச் செல்லும்போது, பச்சைக்கிளியே அவனுக்கு மணமகளாகத் தரும்படி சீமாட்டியைக் கேட்டுக் கொண்டான். சீமாட்டியாக இருந்த அந்த ஓணான் தேவதை, சொந்தப் புதல்விபோல் வளர்த்துவந்த பச்சைக் கிளி அரசனை மணந்து அரசியாகப் போவதில் மனமகிழ்ந்து, அதற்கு உளமிசைந்து உறுதியளித்தாள். திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யப் போவதாகவும், அரசியின் பதவிக்கு ஏற்றபடி வாழ்க்கை நடத்துவதற்கு வசதியாக இருக்கும் பொருட்டுப் பச்சைக் கிளிக்குத் தான் பத்து நூறாயிரம் பொன் மகட்கொடை கொடுக்கப் போவதாகவும் அவள் கூறினாள்.

மறுநாள் காலையில் மணமகளை அரண்மனைக்கு அழைத்துச் செல்வதற்காக அரசன் அங்கு வந்தான். நன்றி மறந்த