உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுகதை விருந்து

(235

இரண்டாவது மனிதன் அவர்களை நோக்கி, “நீங்கள் போகலாம். நான் வரமாட்டேன். நான் ஆசாரியன் மொழிப்படி நடக்கவேண்டும். இந்த வெள்ளித் தகடுகளே எனக்குப் போதும்’ என்றான். இதனைக் கேட்ட மற்றை இருவரும் மலையேறிப் போயினர். வெள்ளித் தகட்டுக்காரனோ சுமக்கக் கூடிய வரையில் வெள்ளித் தகடுகளை யெடுத்துத் தலைமேல் வைத்துக்கொண்டு தன்னூர் திரும்பினான்.

பேராசை கொண்டு பெருவழி சென்ற இருவரும் பெரு மகிழ்ச்சியுடன் மலையேறிச் செல்ல, நெடுந்தொலைக்கப் பால் முன் சென்றவன் இறகு மெதுவாய்க் கைவிட்டு நழுவிவிட்டது. திட்டென நின்று இருவரும் அவ்விடத்தைக் கொத்தினர்; மண்ணெல்லாம் பொன்னாக விருந்தது. பார்த்தான் பொன்னுடையான். மட்டற்ற மகிழ்ச்சி மேற்கொண்டான். "நண்பனே பொன்னே அகப்பட்டு விட்டது; அதுவும் மட்டற்றுக் கிடக்கின்றது. நாம் இருவரும் வேண்டியவரையிற் கட்டி யெடுத்துக்கொண்டு கடுகென ஊர் போய்ச் சேரலாம். பொன்னை விட மேலான பொருளும் உண்டா! வீணாசை வேண்டா. கட்டிக்கொள் மூட்டை. சட்டெனச் செல்லலாம்.” என்றான். இதனைக்கேட்ட கடையானவன் பொன்னாளனை நோக்கி, “அடா அடிமுட்டாளே! செம்பும் வெள்ளியும் பொன்னும் முறையாக அகப்பட்டுக்கொண்டு வந்தனவே! இனி மாணிக்கமே அகப்படுமென்பதற்கு மாறேதாயினு முண்டோ! இன்னும் போய்ப் பார்க்கவேண்டும். எழுந்திரு போகலாம்." என்றான்.பொன்னாளன், “போடா போ! ஆசைக்கும் ஓர் அளவு வேண்டுமென்றாரே நமது மந்திரகுரு. அதனை நீ சிறிதளவும் எண்ணிப் பார்க்கவில்லையே. வேண்டுமானால் நீ போய்வா; யான் உனக்காக இங்குக் காத்துக்கொண்டிருக்கின்றேன்” என்றான்.

பொன் வெறுத்துக் கன்மேலாசை வைத்தவன் தனி வழியே போயினான். சில தூரஞ்சென்று சுற்றிச் சுழன்று ஓரிடத்தைச் சேர்ந்தான். அங்கு அனல் வீசுகின்றது. கண் பஞ்சடைகின்றது.நாக்கு வறட்சி கொடுக்கின்றது; தாகமோ சொல்லுந்தரமன்று. இந்நிலையில் அங்குச் சென்றடைந்த ஆசைப்பேய் பிடித்த பார்ப்பான், தலையின் மேல் நின்று ஒரு