உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(264)

||

அப்பாத்துரையம் – 40

விளக்கக் கதை ஆகியவைபற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அச்சமயம் பனைமரப் பூதத்தைவிட உயரிய ஒருபூதத்தின் உருவம் கண்ணாடியில் தெரிவது கண்டு அவன் வியப்படைந்தான்.

உண்மையில் அது பேரீந்தமரப்பூதமே, வீட்டை அடை யாளம் கண்டபின், அது சுற்றிப் பார்த்தது. பலகணி திறந்திருக்கவே எட்டிப் பார்த்தது. அதுவும் தன் நிழலைக் கண்ணாடியில் கண்டது. புதுப் பூதத்திற்கு புதிய அச்சம் பிடித்தது. "ஒரு பேரீந்த மரப் பூதத்தையுமல்லாவா அடைத்து வைத்திருக்கிறான்? என்ன காரியம் செய்தோம். ஓடிவிடு வோம். தலை தப்பினால் போதும்” என்று அது ஓடத் திரும்பிற்று.

கண்ணாடியில் யாவும் பார்த்துக் கொண்டிருந்தான் பண்ணன். அது ஓடத் திரும்புவது கண்டதும், "எங்கே போகிறாய்? பூதமே!நில்! உன் தோழனுடன், உன்னையும் அடைக்கிறேன் பார்” என்று கூறினான்.

பேரீந்தமரப் பூதம் வியர்த்து விறுவிறுத்தது. “அண்ணா! மாமா பனைமரப்பூதம் தான் என்னை அனுப்பினார், ஒரு பத்தாயம் நெல் போதுமா? ன்னொரு பத்தாயம் அரிசி யாகவும் இருக்கட்டுமா? என்று கேட்டுவரச் சொன்னார்" என்றது.

66

"அடே! இதைச் சொல்லாமல், ஏண்டா ஓடப் பார்த் தாய்? நீ வெளிநாட்டுப் பூதம் போலிருக்கிறது. உன்னை இலேசிலே விடப்படாது. நீ இங்கிருந்தே பத்தாயிரம் பொன் காடு. அத்துடன் பனைமரப் பூதம் சொல்லியபடி இன் னொரு பத்தாயம் அரிசியையும் ஓரிரவுக்குள் ஏற்பாடு செய்! ல்லாவிட்டால் உன்னையும், உன் மாமனையும் தொலைத்து விடுவேன்!” என்றான்.

பேரீந்தமரப் பூதத்தின் குரல் கீச்சுக்குரலாயிற்று. 'இங்கிருந்தே பத்தாயிரம் பொன் தர, என் பிறப்பிடம் இங்கில்லையே. ஆனால் ஒரு பகலிரவு தவணை தாருங்கள். மாமாவைப் பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டாம். நானே இரவுக்குள் உங்கள் பலகணிக்குள் பத்தாயிரம் பொன்னைக் குவிக்கிறேன். புதிய பத்தாயம் அரிசியும் இரவுக்குள்