உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வியப்பூட்டும் சிறுகதைகள்

(267

அவர்கள் சற்றுத் தாராளமாகவே பொருளுதவி செய்தார்கள். எனவே, கோமாறன் ஒரு நல்ல குடும்பப் பெண்ணையே தேர்ந்தெடுக்க முடிந்தது, அப்பெண்ணின் பெயர் குணமாலை. பெயருக்கேற்ப, அவள் நற்குணச் செல்வியாக அமைந்தாள். அவள் பெற்றோருக்குக் கோமாறன் கைநிறையப் பணம் கொடுத்தான். அவளையே தன் இல்லம் கொண்டுவந்து மணம் முடித்துக்கொண்டான்.

மணவினைதான் ஆயிற்று. மணவாழ்வின் பொறுப்பு இன்னும் பெரிதாயிருந்தது. ஆனால், கோமாறன் இதற்கும் சளைக்கவில்லை. அத்துடன் இத்தடவை அவன் பிறர் உதவி கோரவும் எண்ணவில்லை. தொலை சென்றாவது. தன் முயற்சியாலேயே பொருள் திரட்ட எண்ணினான்.

தன் எண்ணத்தை அவன் தன் மனைவிக்கும் தாய்க்கும் எடுத்துக் கூறினான். இளமனைவி குணமாலை பிரிவாற் றாமையால் வருந்தினாள் அவன் தக்க நல்லுரை கூறி அவளைத் தேற்றினான் அன்னையிடமும் அவன் போகும் இன்றியமையாமையை விளக்கி விடைபெற்றான்.மனைவியை தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு அவன் மதுரைக்குப் புறப்பட்டான்.

கோமாறனுக்கு மும்முடி என்ற ஒரு நண்பன் இருந்தான். போகும் பரபரப்பில் அவன் அந்நண்பனிடம் விடைபெற மறுத்தான். ஆனால் ஊரெல்லை தாண்டிச் சிறிது தொலைவிலேயே அந் நண்பன் எதிர்ப்பட்டான். அப்போது பொழுது சாயத் தொடங்கிவிட்டது. நண்பர் இருவரும் ஓர் இலுப்பை மரத்தடியில் அமர்ந்தனர்.

தான் கொண்டுவந்திருந்த சிற்றுண்டியில் அவன் நண்பனையும் வற்புறுத்தி உண்பித்தான். பின்பு அவர்கள் மாலை நெடுநேரம் வரையில் உரையாடிக்கொண்டு இருந் தார்கள். பிறகு நண்பன் ஊருக்குத் திரும்பினான். கோமாறன் அடுத்த ஊர் சென்று, ஒரு விடுதியில் இரவு தங்கிப் புறப்

பட்டான்.

கோமாறன் இந்நிகழ்ச்சியை ஒரு நன்னிமித்தமாகவே கொண்டான். வெளியூர் வாழ்க்கை பற்றியமட்டில், அது நன்னிமித்தமாகவே இருந்தது. ஏனெனில், ஓராண்டுக்குள்