உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(276) || __ __

அப்பாத்துரையம் – 40

மன்னன் கோவேந்தன் கேள்வி தொடங்கினான். கோமாறன் சிரிக்கவில்லை; சினக்கவில்லை. ஒன்றொன் றாகத் தனக்கு நேர்ந்தவற்றை எல்லாம் கூறினான்.

கோவேந்தன் சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந் தான். அவன் என்ன சொல்லப்போகிறான் என்று கோமக்கள் ஆவலாக இருந்தனர். “இது எவ்வளவோ சிறிய வழக்குத்தான். ஆயினும் எதிர்தரப்பினரை அழைக்காமல் தீர்ப்புச் சொல்ல முடியாது.தீர்ப்பை நடைமுறைப் படுத்தவும் முடியாது. ஆகவே, நாளை இந்நேரத்துக்குள் எதிர்தரப்பாளரையும் அழைக்கிறேன். தீர்ப்பு நாளையே கூறப்படும்" என்று ஆய்ந்து அமைந்து

பேசினான்.

கோமாறன் 'சரி' என்று போய்விட்டான். அவன் உள்ளத்தில் புதிய நம்பிக்கை எதுவும் எழவில்லை. ஆனால், புதிய அவநம்பிக்கைக்கும் எதுவும் தோன்றவில்லை. நாள் வரை அவன் அந்தப் பக்கத்திலேயே சுற்றித் திரிந்தான்.

மறு

கோவேந்தனாக நடித்த சிறுவனை மற்றத் தோழர்கள் சுற்றிவளைத்தனர். "தோழனே! என்ன அவ்வளவு எளிதாகப் பேசிவிட்டாய். நாளை என்ன செய்யப்போகிறாய்?” என்று

கேட்டார்கள்.

அவன் சிரித்தான். "நாளைச் செய்வதை நாளை பார்க்கலாம். நீங்கள் தாம் சரியான தீர்ப்பு அளிக்காவிட்டால், என்னைப் பதவியிலிருந்து நீக்கித் தண்டிக்கப் போகிறீர்களே; ஆனால், சரியாகத் தீர்த்துவிட்டால், என்ன பரிசோ?” என்றான்.

66

குடியரசனுக்கு வேறு என்ன பரிசு இருக்கமுடியும்? குடிமக்களின் அன்புதான் பரிசு நாங்கள் பெரியவர்களான பின்னும் உன்னையே அரசனாக்குவோம்" என்றான். பணி யாளனாக நடித்த சிறுவன்.

கோவேந்தன் பணியாளன் பக்கம் திரும்பினான். “இப் போது உனக்கு வேலை இருக்கிறது. நீ மீண்டும் பணியாளாக வேண்டும். ஊர் காவலரிடம் நான் தரும் முடங்கலைக் கொண்டு போய்க் கொடு, அவர் சொல்லுகிறபடி நடந்து கொள்ள வேண்டும்” என்றான்.