உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

9

என்று நினைந்து நினைந்து ஊடுருவிச் செல்லுதற்கு அரிதாம் அவ்விருளை நோக்கிய வண்ணமே மிக வருந்தி நின்றேம். அங்ஙனம் நிற்பேழுக்கு எதிரில் விரிந்த அவ்விருளின் நடுவிலே மனவலிமையும் விடாமுயற்சியும் ஆழ்ந்த வறிவு முடைய சிலர் அஞ்சா நெஞ்சினராய் இயங்கும் அரவம் செவிப்புலனாயிற்று. கதுமென அப் பக்கமாய் உறுத்து நோக்க அவர் அங்கே புற்றுமூடிய சரக்கறையினைத் திறம்படப் பிரித்து, அதனுள் ளிருந்த பொற் பேழையினை உடைத்து அதனுள்ளிருந்த முழுமாணிக்க மணிகள் சிலவற்றைப் புறத்தே எடுத்து வைத்தனர். உடனே, அக்கால வரணில் விரிந்த இருள்வலி சுருங்குவதாயிற்று. அது கண்டு கரை கடந்த உவகையுடை யேமாய் உள்நுழைந்து அவற்றினருகே சென்று விழைந்து நோக்க அவ்வரிய பெரிய முழுமாணிக்கமணிகள் தொல்காப்பியம், திருக்குறள், இருக்குவேதம், திரிபிடகம் முதலியனவாய் இனிது விளங்கின. பின் இவ்வருமருந்தன்ன நூல் விளக்கத்தினாலே அப் பண்டைக் கால வரண்மனை யினுட் சிறந்த இடங்கள் பலவுங் கண்டு வியப்பேமாயினேம். அது நிற்க.

னி

இனி இந்நூல்களின் துணைகொண்டு பண்டைக் கால வியல்பு முற்று முணர்தல் அரிதாய விடங்களினெல்லாம், தமிழ் ஆரியம் முதலான மொழிகளில் முனனும் பின்னுமுள்ள சாற்பிரயோகங்கள் தோன்றி நின்று அவ்விடர்ப்பாட்ட L விலக்கி நம் ஆராய்ச்சியினை வலிபெறுத்தி வருகின்றன. நில நூல் வல்ல ஆசிரியர் இந்நி இந்நிலவுலக அமைப்பினையுந் தோற்றத் தினையும் நன்காராய்ந்து இதற்கு அகவை குறிக்கின்றனர். இந்நில வுருண்டையின் நடுவு மிகவிரிந்த குடைவாக விருக்கின்றது. அக் குடைவிலே தீக்குழம்பு நிறைந்து எரிந்து கொண்டிருக்கின்றது. அக் குடைவுக்கும் இந் நிலத்தின் மேற்புறத்துக்கும் இடையிலுள்ள மட்பகுதி பல அடுக்குகளாக அமைந்திருக்கின்றது.படைப்புக் காலத்திலே ஒரு பெருந்தீப்பிண்டமாக இருந்த இந்நிலங் காலந்தோறும் இறுகி யுறைந்து செல்கின்றதாகலின் இங்ஙனம் மண்ணடுக்குகள் உண்டாயின. இவ்வடுக்குகள் ஒவ்வொன் றனையும் அகழ்ந்து பார்த்து அவ்வடுக்குகள் உண்டாதற்குரிய காலம் இத்துணையாம் என்று நில நூல்வல்ல ஆசிரியர்

பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/34&oldid=1591697" இலிருந்து மீள்விக்கப்பட்டது