உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

107

அமையாது; இவ் விந்தியநாட்டின்கட் காணப்படும் துலுக்கர் கிறித்துவரிற் பெரும்பாலார் இந்துமக்களிலிருந்தே திரிபடைந்த வராதல்போல, இந்நாட்டின்கண் உள்ள பார்ப்பனரிற் பெரும்பாலாரும் சில நூற்றாண்டுகளுக்குமுன் வேளாளக் குருக்களாய் இருந்தவர்களேயாவர். இதற்கு அறிகுறியாக, வேளாளர்க்குரிய 'பிள்ளை' என்னு ம் பட்டப்பெயர் திருச்செந்தூர் முதலான இடங்களில் உள்ள பார்ப்பனர்க்கு ன்றுகாறும் வழங்கிவருகின்றதென்றும், அப் பட்டப்பெயரை அவர்கள் மெல்லமெல்ல மாற்றி வருகின்றன ரென்றுங் கேள்வியுறுகின்றோம். இன்னும், ஆழ்வார்கள் பாடிய செந்தமிழ்ப் பாடல்களுக்கு உரை எழுதிய பார்ப்பனராகிய 'பெரியவாச்சான்பிள்ளை' என்பவர் ‘பிள்ளைப் பட்டம் 'பிள்ளைப்பட்டம் பூண்டிருத்தலும் இதற்கொரு சான்றாம்.

இனி, இவ்வேளாளருள் அரசர்களுங், குறுநில மன்னர் களும், அவரின்கீழ் அமைச்சராயும் படைத்தலைவராயும் ருந்தோரும், இவர் தமக்கெல்லாம் உறவினராய் உழவு தொழிலை நடப்பித்துச் செல்வராய் வாழ்ந்தோரும் எல்லாம் ஒரு தொகுதியாய் அரசமரபினராயினர். உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னியும் அவன்மகன் கரிகாற்பெரு

வளத்தானும் போல்வார் வேளாளரிற் பெருவேந்தராய்ப் பழையநாளில் இத்தென்றமிழ் நாட்டில் அரசுபுரிந்தோர் ஆவர்; வேள்பாரி, வேள்எவ்வி, இருங்கோவேன் முதலாயினார் வேளாளரிற் குறுநில மன்னராவர்; சேக்கிழார் போல்வார் ஆவர்;

அரசர் பால் அமைச்சராயிருந்த வேளாளர்

கோட்புலிநாயனார் போல்வார் அரசருக்குப் படைத் தலைவராய் இருந்தவேளாளர் ஆவர்; சோழன்கரிகாற் பருவளத்தானுக்குப் பெண் கொடுத்த நாங்கூர் வேள் போல்வார் அரசர்க்கு உறவினராய் உழவுதொழில நடப்பித்துக்கொண்டு வாழ்ந்த வேளாளர் ஆவர் என்க.

இனி, உழவுதொழிலாற் பெற்ற பல பண்டங்களையும் ஓரிடத்திற்றொகுத்துப் பலரும் எளிதிற் பெறுமாறு விற்று வாணிகம் நடாத்தினோரே வேளாளருள் வணிகராயினர். இவ்வணிக வேளாளர் செட்டிப் பட்டம் பெற்றிருத்தலும், இவர்கள் மேற்கூறிய உழுவித்துண்ணும் வேளாளரோடு ஒருங்கிருந்து உணவெடுத்தலும் அவரோடுபெண் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/132&oldid=1591797" இலிருந்து மீள்விக்கப்பட்டது