உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

239

தமிழ்மக்களை மேல்நிலைக்குக் கொணர்ந்தவனாதல் வேண்டு மென்பது புலப்படும். நன்றிசெய்த முன்னோரை நினைந்து அவர்களைப் பரவுதல் தமிழர்க்கு இயற்கையாதலால், அவர் கால்வழியில் வந்த மருதநிலத்து உழவர் முதல்வேந்தனான அவனது ஆவியை வேண்டி வணங்குவாரானார் என்க. மருத நிலத்தின் கண்ணேதான் அரசனும், அரச வாழ்க்கையும் அவனது அரண்மனை வாய்ந்த நகரமும் இருந்தமை பண்டைத் தமிழ்நாட்டு வழக்கு என்பதனையும் மேலே காட்டினாம். அங்ஙனந்தமிழர் தம் முதல் வேந்தனை வணங்கினும் அவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டிலர் என்பது யாம் மேலே காட்டியவாற்றால் நன்கு புலனாம்.

இனி, ஆரியர் வணங்கிய ‘வருணனும்’ வேறு, தமிழர் வணங்கிய 'வருணனும்' வேறு. ஆரியர்க்குரிய 'வருணன்' வானின் தெய்வமாக இந்திரனோடு ஒப்பவைத்துச் சிறந்தெடுத்து அவரால் வணங்கப் படுவோன் ஆவன்; இருக்கு வேதத்தில் இவன் மேற் பாடப்பட்ட பாடப்பட்ட பதிகங்கள் பல, தமிழர்க்குரிய வருணனோ தமிழருட், கடலுங் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்திலுள்ள மக்களால் மட்டுங் கடற்றெய்வமாக வைத்து, வணங்கப்படுபவன் ஆவன், இருக்கு வேதத்திலுள்ள ‘வருணன்’ கடற்றெய்வமாக ஒரோவொருகால் அருகிச் சொல்லப்படினும், பிற்காலத்துப் புராணங்களிற் சொல்லப்படும் வருணனுக்கும் இருக்குவேத வருணனுக்கும் ஏதோர் இயைபுங் கண்டிலேம். தமிழ வருணனும், ஆரிய வருணனுஞ் சொல்லால் ஒத்தல் பற்றி அவ்விருவரையும் ஒருவரென்றல் ஆராய்ந்துணராதார் கூற்றாம். தமிழரில் நெய்தல் நில மக்கள் வருணனை வணங்குதல் தமக்கு வலைவளம் வாய்த்தற் பொருட்டுங், கடல் மேற்செல்லுந் தமக்குத் தீங்குநேராமைப் பொருட்டுமேயாம். இத்துணையே யன்றித் தமிழரில் ஏனையோர் வருணனை ஒரு பெருந்தெய்வமாக வைத்து வழிபட்டவர் அல்லர். அவ்வருணனுக்குத் தனிக் கோயில்களாதல், அவனை வழுத்திய பாடல்களாதல் தமிழ்நாட்டினுந் தமிழ்மொழியினும் இல்லை ஆகையால்,

ஆரியர் தமக்குரிய பெருந்தெய்வங்களாக வைத்துப்

பலவாற்றானுங் கொண்டாடிய இந்திர வருண வழிபாடுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/264&oldid=1591962" இலிருந்து மீள்விக்கப்பட்டது