உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

||-

அப்பாத்துரையம் - 41

நற்செயல்கள் மூலம் பிறரை நண்பர்களாக்க முயல்வதை விட, வன்சொற்கள் மூலம் அவர்களைப் பகைவராக்கமா லிருப்பது எளிது.

நல்ல தோழமை, நல்ல உரையாடல், நல்லொழுக்க வாழ்வின் நாடி நரம்புகள்.

பர்ட்டன் காலின்ஸ்.

வைபிரண்டுமே

ஜஸாக் வால்ட்டன்.

ஏடுகளிலிருந்து நான் கற்பதைவிட உரையாடல்களிலிருந்து

கற்பதே மிகுதி.

ஸி. ஜே. பாக்ஸ்.

கற்றலிற் கேட்டலே நன்று.

முன்னுறை அரையனார்.

கற்றிலன் ஆயினும் கேட்க; அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாம் துணை.

திருவள்ளுவர்.

நல்லுரையாடலின் கூறுகள் வாய்மை, நல்லுணர்வு, நகைத் திறம், சொல்திறம் ஆகிய நான்குமே.

ஸர். வில்லியம் டெம்பிள்.

நல்ல உரையாடலுக்கு நன்கு பேசும் திறன் எவ்வளவு சிறப்போ, அவ்வளவு நன்கு கவனித்துப் பொறுமையுடன் கேட்கும் திறனும் வேண்டும். அது போல் கவர்ச்சி தருவது பிறிதில்லை.

சீனப் பழமொழி.

உரையாடலின் மறைதிறவு மற்றவர் விருப்பம் பேசுவதா, கேட்பதா என்றறிவதே.

28. பெருமையும் சிறுமையும்

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.

ஸ்டீல்.

அதிவீரராம பாண்டியர்.