உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

-

அப்பாத்துரையம் - 41

வீரச் செயல்கள், நற்செயல்களுக்கான ஒரு நற்றூண்டு தலாகவே நான் புகழை விரும்புகிறேன்.

மாலெட்.

புகழ் ஆற்றைப்போல் பிறப்பிடத்தில் ஒடுங்கியது. ஆனால், அது நீண்டு செல்லுந்தோறும் அகன்று செல்கிறது.

டாப்னென்ட்.

நான் பொன்னை விரும்பவில்லை. ஆயினும், புகழை விரும்புவது ஒரு பழிச்செயலானால், உலகின் உள்ள உயிர்களிடையே பெரும் பழிக்குரியவன் நானே.

ஷேக்ஸ்பியர்.

இறந்தபின்னரே புகழ் வருமாயின், அதைப் பெற நான் விழையமாட்டேன்.

மார்ஷியல்.

சிப்பிக்குள் ஒளியுடை முத்து முதிர்வுறுவது போல, உண்மைப் புகழ் கல்லறைக்குள்ளிருந்தே விளைவுற்றது ஒளி பிறங்குகிறது.

லாண்டார்.

புகழை விரும்புபவன் இகழுக்கு அஞ்சக்கூடாது. இகழச்சமே புத்தறிவுக்குச் சாவுமணி.

சிம்ஸ்.

ல்வாழ்க்கையின் செல்வங்களுளெல்லாம் சிறந்தது புகழே. உடல் மண்ணிற் கலந்தபின்னும் புகழ்வாய்ந்தவர் பெயர் நீடித்து வாழ்கிறது.

ஷில்லர். கு

புகழுக்கு உரிமையாகிறவர் மிகச் சிலரே. விலைக்கு வாங்கப் பெற முடியாத மிகச் சிலவற்றுள் அது ஒன்று - மனித இனத்தின் நன்கொடை அது ஒன்றே. அது பெறுமுன் தகுதித் தேர்வு மிகுதி; தகுதி கண்டபின்னும் உலகம் வழங்க மன மில்லாததுபோல் அளந்து தான் அதனை வழங்குகிறது.

ஜான்சன்.