உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மக்களும் அமைப்புகளும்

89

கூட்டிணைப்புக்களும் தத்தம் தன்மையளவைகளில் மாறுபடுவ

தில்லை.

அறிவியலின் இக்கணக்கியல் பண்பு அல்லது அடிப்படை பண்பே அறிவியல் கட்டடத்தின் தலைக்கல் ஆகும். எந்த அறிவியல் துறையும் தன்தன் முழுநிறைநிலை நோக்கி முன்னேறுந்தோறும், இக் கணக்கியற் பண்பும் அதில் மேம்பட்டு நிரம்புதல் காணலாம்.

அறிவியல் மட்டுமன்றி எல்லாத்துறைகளிலுமே இத்தகைய அடிப்படைக் கணக்கியல் பண்பமைதி உண்டு. வாழ்கையில் மிக பரந்தும், வாழ்க்கையின் இலக்கணமாகிய அறநூலின் பொன்வேய்ந்த முகடாகிய சமயத்தில் செறிவாகவும் இதே அமைதியைக் காணலாம். அறநூலார் இவ்வமைதியை மேற்புற நோக்காகர் கொண்டு கடவுள் என்பர். சமயத்துறைவாணரோ மனிதர் பெற்று நுகரவேண்டும் ஒரு முடிவு நிலையாக அதனைக் கொள்வர். அந்நிலை அடைந்தவர்களை அவர்கள் "பேரமைதிநிலை" (வீடு, நிர்வாணம், முக்தி) அடைந்தவர் என்று பெருமைப்படுத்துகின்றனர்.

அலையெழுந்தாடிக் கலக்கமுறும் காலம் என்னும் கடற்பரப்பின் அடிப்படைத்தளத்தில், அல்லது அவ்வடித் தளத்தில் ஊன்றி நிற்கும் பாறைமீது முன்னிலைப்பெற்று நிற்பவர் அவர்கள். திருத்தொண்டர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், முனிவர்கள் என்று குறிக்கப்படத்தக்கவர்கள் இவர்களே.

ஒரே அறிவுத் தொகுப்பு

செயல்கள், அவற்றின் விளைவிகள் ஆகியவை பற்றிய அனுபவங்களின் தொகுதியாகவே வாழ்க்கை இயங்குகின்றது. இவ்வனுபவங்களின் இயற்கை முடிவே அறிவுப்பேறு. வாழ்க்கையில் நாம் அடையும் வளர்ச்சி முற்றிலும் இவ்வறிவின் வளர்ச்சியன்றி வேறல்ல. உலகம் இவ்வறிவை அடைவதற்கான ஒரு பெரும் பள்ளி அல்லது கல்லூரி அல்லது பல்கலைகழகமே யாகும். இக்கல்வி நிலையங்களின் மாணவர் பலதரப்பட்டவர்கள். அவர்கள் அறிவின் வளர்ச்சி முறைகளும் பல வளர்ச்சி வேகமும் பலதரப்பட்டது. ஆனாலும் அவர்கள் அறியவேண்டுமென்று முன்பே தொகுத்து வகுக்கப்பட்ட அறிவு ஒன்றே. இது போலவே,