உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

அப்பாத்துரையம் – 43

ஏழையாயினும், உலகை எதிர்பாராது வாழ்ந்து பணியாற்றலாம். செல்வரிடமோ, அரசியலாரிடமோ சென்று அவன்

மண்டியிடவேண்டி வராது. அவன் பொருளீட்டிவிட்டால் உலகம் அவன் செல்வத்தால் பயனடைந்து அவனைப் புகழும். செல்வரும் அரசியலாரும் அவனை நாடி அடைவர். ஏனெனில் அவன் அவர்களுக்கு அடிமைப்படாமலே செல்வனானவன். அவன் செல்வம் அவர்கள் செல்வத்தினும் ஆற்றலுடைய தென்பதனை அவர்கள் காண்பர்.

பெருஞ் செல்வத்தால் பலர் செருக்கடைவதுண்டு. அறிவுத்திறத்தாலும், கலைத்திறத்தாலும் வேறு பலர் செருக்குறுவதுண்டு. ஆனால், இச் செருக்கின் அடிப்படை பிறர் அவரை மதிப்பது தான் என்பதையும் இம் மதிப்பினும் அவர்கள் அன்பு மிகவும் பெருமையுடையது என்பதையும் அவர்கள் அறியார். பெருஞ் செல்வத்துடன் பிறருக்கு பயன்படாதவனை விட, சிறு செல்வத்துடன் பிறருக்குப் பயன்படுபவனுக்கு எங்கும் மதிப்பு மிகுதி என்பதைக் காணலாம். செல்வரினும் அறிஞருக்கும், ஆட்சியாளரினும் கலைஞருக்கும் மக்களிடையே செல்வாக்கு மிகுதியாயிருப்பதன் காரணம் இதுவே. அறிஞரும் கலைஞரும் மட்டும் பணத்துக்காகச் செல்வரையும் ஆட்சியாளர்களையும் அணுகாதிருக்க முடியுமானால், ன்றைய உலகின் ஆட்சி அறிஞர் கலைஞர் கையிலேயே இருந்திருக்கும். ஏனெனில் அறிஞர், கலைஞர், உழைப்பைச் சுரண்டியே செல்வர் செல்வம் ஈட்டுகின்றனர். ஆட்சியாளர் ஆளுகின்றனர்; மற்றும் அறிஞர் கலைஞர், தன்னல வாழ்வு வாழாமல் பொது நல வாழ்வு வாழ்வார்களானால் உலகின் ஆட்சி மக்கள் நிறை ஆட்சியாகவே இருந்திருக்கும். அறிஞரைப் புறக்கணிக்கும் மக்களும் மக்களைப் புறக்கணிக்கும் செல்வரும், செல்வரை அண்டிவாழும் அறிஞரும் என உலகம் முக்கூறுபட்டிராது.

ளைஞர் பொருள் நாடி அதற்காகத் தற்பண்புடன் உழைத்து, எளிய வாழ்வும் வாழ்வாராயின், அவ்விளைஞன் வாழும் நாடு உலகிற்கு வழிகாட்டும் நாடாகவும், உலக நாகரிகத்தின் முகடாகவும இயங்கும் என்பதில் ஐயமில்லை.

செல்வத்தைப் பற்றிக் கவலைகொள்ளாமலிருப்பது தவறு என்றும்; உழைத்துச் செல்வம் பேணுவதைப் போல், தன்