நல்வாழ்வுக் கட்டுரைகள்
கவ
85
சென்றனர். பிள்ளைகளிடம் தாய் தந்தையருக்குரிய பொறுப்பினை ஒழுக்க நூலார் சுட்டிக் காட்டுவதில்லை. இதற்குக் காரணம் பிள்ளைளைப் பெறு முன்பே பிள்ளையருமையினைத் தாய் தந்தையர் அறிந்தவர் ஆவர் என்று அவர்கள் கருதியதே. பிள்ளைப் பாசம் மனித நாகரிகத்துடனே மட்டுமன்றி, உயிர்கள் வளர்ச்சியினூடாக ஒட்டி வளர்ந்த இயற்கையுணர்ச்சிப் பண்பு. இதனாலேயே, ‘பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு' என்ற பழமொழி வழங்கி வருகிறது. இதனைத் தாயின்பற்றில் நன்கு காணலாம். பிள்ளை எத்துணை தவறு செய்தாலும் எத்துணைக் கொடுமை செய்தாலும், தாய் தீமைக்கும் நன்மையே செய்து, பிள்ளை நலம் ஒன்று பற்றி மட்டுமே கவலை கொள்ளும் இயல்புடையவளாயிருக்கிறாள். ஆயினும், இங்ஙனம் பாசம்தான் மனித நாகரிகத்தில் வளர்கிறதே தவிர பொறுப்பும் பொறுப்புணர்ச்சியும் வளர்கின்றன என்று கூறுவதற்கில்லை. உண்மையில் விலங்குகளிடையே தான் பாசமும், பொறுப்பும் ஒருங்கே இயற்கையுணர்ச்சியாக வளர்கின்றன. மனிதனிடத்தில் பாசம் வளர்கிறது. பொறுப்பு மறுக்கப்படுகிறது, ஏனெனில், மனிதன் வாழ்வில் அவன் நீண்டநாள் அறிவின் செயலால், செயற்கையாகத் தோன்றி வளர்ந்துள்ள நாகரிகத்தில் அவன் பொறுப்பெல்லை, இயற்கையுணர்ச்சி யெல்லையை மீறி வளர்ந்துள்ளது.
உயிரினங்கள் வகையில் பெற்றோர் பொறுப்பு, பிள்ளையைப் பெறுவதுடன் பெரும்பாலும் நீங்கிவிடுகிற தென்னலாம். உயிரினங்களில் அன்னையும் தந்தையும் இயற்கை வாழ்வே வாழ்வதினால், நம் உடம்பைப் பேணவோ, தம் பிள்ளைகள் உடம்பைப் பேணவோ தனிப்பட எதுவும் செய்ய வேண்டிய தில்லை. ஓடியாடி உணவு தேடித் தங்கு தடையின்று ஊடாடித் திரியும் வேற்றின் வாழ்வில், அவற்றின் உடல் உரம் பெற்றுக் குழந்தைகள் உடலும் உரமுடையதாகி விடுகின்றது. உயிரினங்கள் உயர்வடையுந்தோறும் சிறிது சிறிதாக பயிற்சி முறை தொடங்குகிறதாயினும், முட்டையிடும் உயிர்களில் இந்த முட்டையைத் தாய் குஞ்சு பொறிப்பதுடனும், முதிராக் குஞ்சுகளுக்குத் தாய் தந்தை இரை கொடுப்பதுடனும் நின்றுவிடுவது. பாலூட்டி வளர்க்கும் உயிர்கள் சிலநாள் குட்டிகளைக் கூட்டிச்சென்று, பகைவரிடமிருந்து தற்காலிகமாகப்