நல்வாழ்வுக் கட்டுரைகள்
93
தேவையானால், மிகுதி ஒறுப்பு வேண்டி வந்த இடங்களில் தாய் தந்தையர் வருத்தம் ஒருவரை ஒருவர் கண்டித்தல், இருவரும் தம்மைத் தாமே தண்டித்துக் கொள்ளுதல் ஆகியவை வழிக்கு வராப்பிள்ளைகளையும் வழிக்குக் கொண்டுவரப் போதியவை. இவற்றுக்கு மேற்பட்ட தண்டனைமுறை ஆசிரியர்க்கோ, சமூகத்திற்கோ, ஆட்சியாளருக்கோ இல்லை என்று மட்டுமல்ல, கடவுளுக்குங்கூட கிடையாது என்னலாம்.
பிள்ளைகளை அடிப்பது மட்டுமன்று, அச்சுறுத்துவது கூடத் தவறு என்று இக்காலக் கல்வித் துறையறிஞரும், குழந்தை வளர்ப்புத் துறையறிஞரும் வற்புறுத்துகின்றனர். இது முற்றிலும் உண்மை; அடிப்பதால் பிள்ளைக்கு உடல் நோவு மட்டுமன்று, உள நோவும் அதனினும் மோசமான பண்புக்கேடுகளும் உண்டாகின்றன. அச்சுறுத்துவதாலோ அவர்களின் அடிப்படை மனிதப் பண்பே கெடுகின்றது. மனிதர் விலங்கு நிலையில் இருந்த காலத்தில் ஒருவரை ஒருவர் அச்சுறுத்தி ஆண்டதன் சின்னங் களாகவே இன்றும் மனிதர் உள்ளங்களிலும் வாழ்விலும் பேய்களைப் பற்றிய அச்சமும், பேய்வழிப்பாடும், போர்வெறியும், போரார்வமும், அச்சம் காரணமான மூடபத்தியும், உருவ வழிபாடும், தனிமனித வழிபாடும் கொடுங்கோன்மை யார்வமும், அடிமைப் பண்பும், சாதி வேற்றுமையும் பகைமையும் நிலவி வருகின்றன என்னலாம்.
பழங்காலம் என்று தவறாகக் கூறப்படுகிற, நாகரிக கேடடைந்து நலிந்த இடையிருட காலத்தில், பிள்ளை வளர்ப்பில் பல தவறான கருத்துக்கள் நிலவியிருந்தன. அவற்றின் பயனாகவே, 'அடியாத மாடு பணியாது, 'கோலைப் பேணிப் பிள்ளையைக் கெடுக்காதே, பிள்ளையைப் பேணு, கோலைக் கெடு' (Spare the rod, spoil the child) என்பன போன்ற பழமொழிகள் தோன்றின. ஆனால், நாகரிக நலிவுற்ற காலமும் நாகரிகமில்லாத காலமாக மாட்டாது. இப்பழமொழிகள் மிகைப்படக் கூறப்பட்டவை யாயினும், சிறிதளவு உள்ளார்ந்த உண்மை உடையவையே. பிள்ளைகள் செய்யும் கேடுகள் தம் உயிருக்கோ, பிறர் உயிருக்கோ கேடு தராதவரை, தீமையையே அவர்கள் நோக்கமாகக் கொண்டு விடாதவரை, அவர்கள் ஒறுப்பு அவர்களைத் திருத்தும் அன்பொறுப்பாக மட்டுமே இருக்க முடியும். இருக்கவும்