நல்வாழ்வுக் கட்டுரைகள்
117
தப்பியுள்ளது. சமூக வாழ்விலும் சமய வாழ்விலும் மட்டுமன்றி, அரசியல் வாழ்விலும் மக்கள் அந் நாடுகளில் கவனம் செலுத்திப் பங்கு கொள்கிறார்கள். ஆகவே அங்கே ஆதிக்கவாதிகள் ஆட்சி எதிர்பற்ற வேட்டைக் காடாயில்லை. இயல்பாய் மனிதர் முயற்சி வேறுபாடு காரணமாக ஏற்பட்டுள்ள உயர்வு தாழ்வுகளிலும், உயர்வு தாழ்வு அடிப்படையில் அமைந்த அமைப்புகளும், பழக்க வழக்கங்களும், நிலையங்களும் இதனால் படிப்படியாக நிலை குலைந்து, சரிசம ஆட்சியும், சரிசம வாய்ப்பும் மக்களுக்கு கிடைத்து த்து வருகின்றன. இது காரணமாகத் தனிமனிதன் குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி, அரசியலிலும் சரி பொறுப்புடையவனாய் வாழ்கிறான். ஆடவரைவிட முயற்சியில் எங்குமே பிற்பட்டுவிட்ட பெண்ணுலகுகூட, மேனாடுகளில் இப்போது தன் பொறுப்பை வகிக்க வீறியெழுந்துள்ளது. இதனால் மேனாட்டுச் சமூகம் அரசியலில் மட்டுமன்றிச் சமயம் ஒழுக்கநெறி ஆகியவற்றிலும் மேம்பாடடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. கீழ்நாடுகளைப் போல் அங்கே அச்சமே ஒழுக்கமாகவும், அடிமைத் தனமே சமயமாகவும், தன்மதிப்பற்ற தன்மையே பொதுமக்களுக்குரிய நிலையாகவும் இல்லை.
மேல்நாட்டிலும் இன்று ஆதிக்கவாதிகள் இல்லையென்று கூறமுடியாது. மேல்நாட்டு நாகரிக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய அறிவுநூல் தரும் ஆற்றலைக்கூட, இவ் ஆதிக்கவாதிகளே பெரிதும் கைப்பற்றியுள்ளனர். ஆயினும், பொது மக்கள் அதனைக் கைப்பற்றும் அவாப் பெற்றுவிட்டனர். ஆதிக்கத்தில் பங்கு கொள்ளவும் அவர்கள் படிப்படியாக முயன்று வெற்றி பெறுகின்றனர். இவற்றுக்குத் தடையான உயர்வு தாழ்வுகள் வேறுபாடுகள் பல உண்டானாலும், அறிஞர் நீண்டநாளாக இவற்றைத் தகர்க்க முனைந்து வெற்றி கண்டும் வருகின்றனர். ஆனால், கீழ்நாடுகளிலோ அறிவியல் சிறதளவும் முன்னேற்றம் அடையவில்லை. முன்னேற்றம் பெற முடியாமலும் இருக்கிறது. இங்குள்ள ஆதிக்கவாதிகள் தங்கள் ஆதிக்கத்துக்காக வெளிநாட்டு ஆதிக்கங்களுக்கு அணைகொடுத்து, அவர்கள் மொழியாட்சி மூலம் நாட்டு மக்கள் தாய்மொழிகளும் தாய்மொழிப் பண்புகளும் வளரவொட்டாமல் தடுத்து வருகிறார்கள். அரசியல் மட்டு மன்றித் தனிமனிதன் செயலாற்றவோ, பேசவோ, சிந்திக்கவோ கூட முடிவதில்லை. பொதுமக்கள் தன்மதிப்பு என்பதைக் கூட