இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருநிறை ஆற்றல்
கண்டிலையோ ஒளிவேற்கண்கதிர்களை? கண்களினால் உண்டிலையோ? பிழை சாய்த்திடும் வான்குரல்
கேட்டிலையோ?
(காவல்)
காலை வேந்தன் ஒளிமகன் காதலன் கார்முகிலின் மேலும் மாமலை மேலும் தன்பொன்னொளி வீசுவதை ஆலித்தோடும் பனியிருள் வேந்தர்தமை அடர்த்த காலின் செவ்வழி கண்டிலையோ கண்முன்? (காவல்) போம் இருள்; போம்இருள் காதலர் காதலிக்கும் பொருள்கள்; போம் இருட்காதல்; ஒலிப்பகைவோர்களும் சென்றொழிவர்; போம் இராவின் இருள் தன்னுடன் போகும் இன்னாத எலாம் ஆம் இனிப்பேரொளி தான் எனக் கூவினர் பாடகரே.
145
(காவல்)