உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பொங்கும் இன்பத்தின் புதைதிறவுகோல்

இன்பத்தின் வேட்கை எங்கும் பெரிதாகவே இருக்கிறது; ஆனால் இன்பப் பேறு எங்கும் அரிதாகவும் காணப்படுகிறது. வறுமைக்கு ஆட்பட்ட மக்களின் மிகப் பெரும்பாலோர் தமக்குப் பெருஞ்செல்வம் கிடையாதா என்றுதான் ஏங்கித் தவிக்கின்றனர். அந்தச் செல்வம் மட்டும் கிடைத்து விட்டால், அந்தச் செல்வமே தமக்கு முடிவில்லாத இன்பத்தைத் தந்துவிடும் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால், ஏற்கெனவே பெருஞ் செல்வத்தைப் பெற்றிருப்பவர்களின் மிகமிகப் பெரும்பாலோர் தங்கள் ஒவ்வொரு சிறு அவாவையும் ஆவலையும் அதனால் தீர்த்துக் கொள்ள முடிந்தாலும், வறுமையுடையவர்களைவிட இன்பத்தி லிருந்து தொலைவிலேயே இருக்கின்றனர். ஏனென்றால் இன்பம் நுகரும் ஆற்றலே அவர்களிடம் குறைந்துவிடுகிறது. அவர்கள் நுகர்ச்சிக்குரிய நரம்பு நாடிகள் தளர்ந்து செயலற்றுப் போகின்றன. இவ்விரு சாரார் அனுபவங்களையும் பார்த்தால், இன்பம் என்பது புறப்பொருளை அடைவதனால் மட்மடும் வருவதல்ல என்றும், துன்பம் என்பது அதனைப் பெறாததால் மட்டும் எய்துவதல்ல என்றும் உணரலாம். இன்ப துன்பங்கள் புறப்பொருளைப் பொறுத்தவையாயிருந்தால், ஏழைகள் எப்பொழுதுமே இன்பமுடையவர்களாகவும் இருக்க வேண்டும். மெய்ந்நிலை இதற்குக் கிட்டத்தட்ட நேர் மாறாகவே இருப்பதைக் காண்கிறோம்.

என் வாழ்வில் நான் கண்ட தலைசிறந்த இன்ப வாழ்வுடைய மக்கள் சிலர் மிகக் குறைந்த வாழ்க்கை வாய்ப்புக்களை உடைய ஏழைகளாயிருந்ததுண்டு. நேர்மாறாக, மிகவும் துயருக்காளான சிலர், நிறை இன்பப் பொருள்களின் சூழலில் இருந்த பெருஞ் செல்வராகவும் இருந்திருக்கின்றனர். அதுமட்டுமோ? தாமே பெரும் பொருள் திரட்டிய பலர் அதனால் தாம் பெற்ற தன்னல