அப்பாத்துரையம் - 43
(244) || பொதுநலமோ பொதுநலத்தையே வளர்க்கிறது. பொதுநலத் துடன் பொதுநலம் முரணுவதில்லை. தன்னலமுடையவன் பிறரிடமிருந்து தன் கருத்து, சொல், செயல்களை மறைக்க வேண்டும். பொதுநலவாளன் அது செய்யவேண்டுவதில்லை. தீமைக்கு அவன் நன்மை செய்வதால், அவன் செயலே அவன் கருத்தை எளிதில் புலப்படுத்தி விடுகிறது.
வாய்மைவழி எளியவழி; அதே சமயம் அது குற்ற மற்றவழி; முடிவிலா இன்பமே முடிவாகக் கொண்ட வழி அது. படர்ந்து திசைதவறி மெய்சோர்ந்த தோழ, கேள்! பரந்து கனியுமுளப் பரமன் அருள்நாடு! அடர்ந்து கனலெழுப்பும் பாலை அதிலோடி, அறவுமுன் நாவறட்சி அடைந்தல்லற் படுவதேன்? கடந்து செலும்வழியில் அருகே கனிமரக்கா, கருது நறும்பனிநீர்ச் சுனையும் அவைஉள, காண்! திடங்கொண் டதுவிடத்தே தேறி இளைப்பாறு, தேர்வாய் அதுவேசீர் வாய்மை எனத்தெளிவாய்! தேடித் துழாவுறுநின் திண்கா லடியருகே தெவிட்டா உயிரன்பின் தீஞ்சுனை மென்பசுமை கூடிக் கிடக்க, நீ குந்தி இளைப் பாறாமல் குலைவதேன்? நீகொள் குறிக்கோளின் அந்தமும் நாடும் முயற்சியின் தொடக்கமும் ஒன்றாக நயந்துன் முனங்கிடப்ப நாடிநீ செல்வதெவன்? தேடுவோன் உள்ளத்தில், தேடும் பொருளாக,
(1)
நாடுவோன் நாட்டமாய் நின்ற அதுகாணய்!
கோடுயர் குன்றத்தில் இல்லை உனதிறைவன்
குன்றேறிக் கொடுமுடி தேடிநீ உழல்வதேன்? ஓடும் மணற்பரப்பில் ஆடுறும் வெங்கானல் உள்ளே இலை, நீ உளைந்து திரிவதுமேன்? மேடுபள்ளம், காடுகரை தாண்டி அவனில்லை, வீணேநீ ஏறி இறங்கி அலமாற்க!
நாடுகின்ற உள்ளத்தில் உள்ஆய், அவ்வுள்ளத்தின் நடுவே மறைந்து நகைத்து நின்றான் காண்கநீ!
(2)
(3)