உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அகநிலை ஆற்றல் பெறும்வழி

இன்பம்,எழுச்சி, புதுமை ஆர்வம்

இவற்றை நாடி,

-

இவற்றால் அலைக்கழிக்கப்படும் மாந்தரே ஆடவர் பெண்டிரே - உலகில் பெரும்பாலானவர் ஆவர். இவற்றால் அவர்கள் தன்னிலை மறந்து நகையாடுவர்; அல்லது கண் கலங்குவர். உள்ள உரத்தையோ, ஆற்றலையோ, நிலை பேறான அமைதியையோ, அவர்கள் நாடுதல் அரிது. நலிவையேநாடி அவாவி, தம்மிடமுள்ள ஆற்றப் பண்புகளையெல்லாம் அவர்கள் குலைத்துக் கொள்கின்றனர்.

அகநிலை ஆற்றலும் செல்வாக்கும் பெற்ற மக்கள் மிகச் சிலரே என்றால், அதற்குக் காரணம் உண்டு. அவற்றைப் பெறத் தன் மறுப்பு. இன்றியமையாதது ஆகும். அத்துடன் தன் மறுப்பால் பெற்ற உறுதியான அடித்தளத்தின் மீது அவர்கள் பாறுமையுடன் நற்பண்புகளாகிய செங்கல்கள் அடுக்கி, ஆற்றலாகிய அரணின் மதில் எழுப்ப வேண்டியவர் ஆகின்றனர்.

அலைகின்ற கருத்துக்கள், உணர்ச்சிகளால் அலைக் கழிக்கப்படல் ஆற்றலாகாது; நலிவேயாகும். ஆற்றல் என்பது அவற்றால் இயக்கப்படுதலன்று, அது அவற்றை இயக்குவது. உணர்ச்சியின் எழுச்சியால் உணர்ச்சியாற்றல் உடையவர்களாகக் காணப்பெறுபவர் உண்டு. இவர்களும் ஆற்றலுடையவர்கள் ஆகமாட்டார்கள். இங்கே ஆற்றல்கூறு இருக்கிறது. ஆனால் அது உணர்ச்சியின் ஆற்றலேயன்றி, உணர்ச்சியை ஆளும் ஆற்றலன்று.

அலைகின்ற உணர்ச்சியில் ஆடுகின்ற நலிந்த உள்ளம்

புழுவின் அல்லது சிறு பூச்சியினத்தின் நிலை யொத்த தானால், ஆட்டுகின்ற ற உணர்ச்சியின் இயக்கம் கரடி புலிகளின் மூர்க்கத் தன்மையை ஒத்தது. அவற்றின் ஆற்றல் அழிக்கும் ஆற்றல்; ஆக்கம் தர அவை உதவ மாட்டா! இவற்றைத்