6. புத்திநெறி
அன்புநெறி ஒன்றே வாழ்வை முழுநிறைவு ஆக்க வல்லது. அறிவாராய்ச்சி சென்றொடுங்கும் முடிந்த இலக்கும், அதன் அணிமணி மகுடமும் அதுவே.
ஒருமனிதன் வாய்மையின் அளவுகோல் அன்பே. அன்பின் ஆட்சி இல்லாத இடத்தில் வாழ்வினை வாய்மை மிகுதொலைவிலிருந்து கூட அண்ட முடியாது. பொறுப் பற்றவரும், ஒறுத்து அடக்குமுறை செய்து கண்டிப்பவரும் எத்தனை உயர்பண்புடைய சமயநிலையுடையவராயினும், இறையளவுகூட வாய்மையுடையவரென்று கூறவியலாது. சமரச மனப்பான்மையுடனும், ஒருசார்பற்ற அமைதியுடனும், தாமும் நடுநிலையுடன் சிந்திக்கத் தூண்டுபவரிடம் வாய்மையின் சுவடு பதியாமல் போகாது. ஆனால் அன்புக்கும் வாய்மைக்கும் உரிய தீர்க்கமான அச்சாணி செயல்முறை வாழ்க்கையே.
று
மற்ற மனிதர்களிடம், பிற உயிர்களிடம் ஒருவன் என்ன உணர்ச்சியுடன் நடந்துகொள்கிறான்? கடுந்தேர்வுகளிலும் நெருக்கடிகளிலும் அவன் எவ்வாறு உறுதியுடன் நிற்கிறான்? வையே வாய்மைக்கும் அன்புநெறிக்கும் உரிய உண்மை யான தேர்வு முறைகள். துன்பம், உணர்ச்சி வேகம், ஏமாற்றம் ஆகியவற்றால் முன்னும் பின்னும் உந்தப்படுபவன், முதல் தேர்வில் தளர்பவன் ஆகியவர்கள் வாய்மையுடையவர்கள் மாட்டார்கள். அவர்கள் அன்பும் உறுதியற்றது.
ஆக
கோட்பாட்டுருவில், தத்துவ உருவில் சிலர் வாய் மையைக் காண நினைக்கிறார்கள். ஆனால் வாய்மை கோட் பாடன்று, கோட்பாடாக அதை உருவாக்கவும் முடியாது. பற்றி உறுதியுடன் நிற்கத் தூண்டும் ஒருபண்பு அது. பற்றிய பின் கழிவிரக்கத்துக்கு இடமில்லாமல், துன்பத்தில் சோராமல், தோல்வியில் நிலைகுலையாமல் இருக்க உதவும் ஆய்ந்