உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

281

மாந்தர் பிறப்பதும், வாழ்வதும், வளர்வதும், மாய் வதும்; துன்புறுவதும், இன்புறுவதும் எல்லாம் இந்த ஓர் அமைதியினைப் பெறுவதற்காகவே. அதைக் கடந்தபின் ஒரே நிறையின்பம்தான்; இன்பதுன்ப மாறுபாடு இல்லை. ஒரே வாழ்வுதான்; பிறப்பிறப்பு வேறுபாடு இல்லை. ஒரே பண்புதான்; பண்பு எதிர்பண்பு, நன்மை தீமை இல்லை. அதன் பின்பு உயிர் வேறு, உடல் வேறு அல்ல; உயிரின் செயற் கருவியுருவே உடலாய் அமையும்.

அறிவும் பண்பும் வாய்ந்த அமைதி, மனிதருக்கு மனிதர், உயிரினத்துக்கு உயிரினம் வேறுபாடறியும் ஆனால் வேறு பாடு காட்டாது. நண்பர் பகைவர், நற்பண்பு, அல்பண்பு திரித்தறியும்; ஆனால் செயல் வேறுபாடு கொள்ளாது. உணர்ச்சி வேறுபாடற்ற இப்பண்பின் செயலுருவே பணி அல்லது தொண்டு. அதுவே உண்மை இறைவழிபாடு. ஏனெனில் அது இறைவன் பண்பின் வழிபட்ட செயல். இறைவன் ஆற்றலும் அதன் வழிபட்டு நின்று செயலாற்றுகிறது.

தன்மறுப்பு, துறவு, தியாகம் ஆகியவற்றின் முழு ஆற்றலையும், பண்பையும், மதிப்பையும், வாய்மையின் மெய்ப்பணி காட்டுகிறது. தன்மறுப்பு, துறவு, தியாகத்தால் பெறப்படும். வாய்மை ஆகியவற்றையுடையோர், அவ் வாய்மையின் பயனையும் மறுக்கின்றனர்; துறக்கின்றனர் அகலுலகுக்காக, உயிரினங்களின் அமைதி நோக்கிய வளர்ச்சிக்காக!

அகமேபுறம், புறமே அகம் என்பது இங்கேதான் மெய்ப் பிக்கப்படுகிறது. நாம் புறம் என்று கூறுவது புறத்தின் முழு உருவன்று. புறத்தின் ஒருகூறுமட்டுமே. புறத்தின் முழுக் கூறும் அகத்திலேயே இயல்பாய் அமைந்து கிடக்கிறது. ஆனால் அகத்தில் நாம் எந்தக்கூறுகளைச் செயற்படுத்துகிறோமோ, அந்தக் கூறுமட்டுமே நம்மை உடனடியாகச் சூழ்ந்த புறச்சூழலாய் அமைகிறது.

ம்

உலகின் மாபெரும் சமயாசாரியர்கள், மக்கள் தலைவர்கள் தியாகத்தின் திருவுருவங்களாகவே காட்சி யளிக்கின்றனர். அவர்கள் தம் நலங்களை, தம் புகழைக் கூட

-