உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் – 43

(288) || அப்புறப்பகுதி அகப்பகுதியின் ஆற்றல் புறஞ்சென்று இயங்காமல் தடுக்கமட்டுமே செய்கிறது. புறத்தை அடக்குவதன் மூலம் மனிதன் பெறும் எல்லையற்ற ஆற்றலின் மறைதிறவு இதுவே.

1

அறியும் அறிவின் செயல்முழுதும் அமைதியைச் செயலாற்றிவிடும் ஒரு பண்பறி வேறன்று. அடிக்கடி அறியும் அறிவு நிலையைவிட அறிவுகடந்த அமைதிநிலைகள், அஃதாவது கனாநிலைகள்' அரும்பெருஞ்செயல் ஆற்றலுடையனவாய் இருப்பது காணலாம்.

எடுத்துக்காட்டாக, கைப்பொறியச்சு அடிப்பவன் கண்கண்டு அடிக்கும் முறையைவிடக் காணாக்கை யுணர்ச்சி முறை மிக எளிதாக விரைந்த வளர்ச்சி தருகிறது என்பதைப் பலரும் அறிவர். இசைக்கருவிகளின் பயிற்சியிலும் இந்த மெய்ம்மையைக் காணலாம்.

கணக்கியலின் உயர்படி ஆராய்ச்சிமுறைகளெல்லாம் எண்கடந்த குறியீடுகள், ஐம்புலக் கற்பனைகளாகிய அறிவு கடந்த உணர்வுக் கற்பனைகள்' ஆகியவற்றாலேயே இயங்குகின்றன. உயிர்களின் உடலிலும், புறப்பொருளியக்க நிலையினைப் புறவுறுப்புக்களின் அமைதியிலும், அகப் பொருளியக்க அமைதியினை நாடி நரம்பு, இதயம், மூளை, தன்னியக்க உறுப்புக்கள் ஆகிய அக உறுப்புக்களிலும் காணலாம்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ்வார்"

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலும் கரி.”

என்று தமிழ்த் திருவள்ளுவரும்,

“ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தால்

அன்பதில் ஒன்றாம் அரன்.”

என அறிவுத்துறை ஒளவைப்பிராட்டியாரின் ஒளவையாருங் குறளும் அகத்தின் பேராற்றலுக்குச் சான்று பகர்கின்றன.

அகத்தின் ஆற்றல் வெறும் புனைந்துரையோ, மிகை யுரையோ அன்று, அவ்வுருவில் கரந்து பெரும்பொருள் நுனிப்பாகக் குறித்த குறிப்புரையேயாகும் என்றும் காணலாம்.