உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

93

தாம். பஞ்சப்பாட்டுப்பாடுதல் வறுமைப்பாட்டுப் பாடுதல் என்பனவும் வறுமை நிலைமையைக் குறிப்பனவே.

‘தந்தனா என்பது இசைமெட்டு; வண்ணப்பாடல் களிலும் இடம் பெறுவது; தாளம்போடல் காண்க. தமுக்கடித்தல் - பலரறியச் சொல்லல்

66

ஊர் சாற்றுதல் என்பது இன்னும் வழக்கில் உள்ளது கையில் தமுக்கு என்னும் ஒருபக்கப் பறை வைத்துக்கொண்டு அடித்து இடை இடையே நிறுத்தி ஊரவர் அறியவேண்டும் செய்தியைக் கூறும் வழக்கத்தில் இருந்து தமுக்கடித்தல் என்பதும் பலரறியச் செய்தல் என்னும் பொருள் தருவதாயிற்று. “உன்னிடம் ஒன்று சொன்னால் போதும்; தமுக்கடித்து விடுவாயே என்பது இப்பொருளை விளக்கும். இந்நாளிலும் ஊராட்சிமன்ற அறிவிப்பு ஏலம் விடுதல் ஆகியன தமுக்கடித்து அறிவிக்கப் பெறுவது உண்மையே. முன்னாளில் யானை மேல் இருந்து பறையறைந்தறிவித்தல் வழக்கமாக இருந்தது. “அறைபறை அன்னர் கயவர்” என்பது வள்ளுவம்.

தலைக்கட்டல் - சீர் செய்தல்

தலைக்கட்டல் என்பது தலையைக் கட்டுதல் என்னும் பொருளைக் குறியாமல் சீர் செய்தல், சரி செய்தல் என்னும் பொருளில் வருவது உண்டு. “நீங்கள் தலைக்கட்டாவிட்டால் பெரிய பெரிய விளைவுகள் எல்லாம் ஏற்பட்டிருக்கும்” என்பதில் இப்பொருள் உண்மை விளங்கும்.

தலைப்படுதல் என்பது முன்னின்று செய்தலையும், தலைக் கட்டல் என்பது முன்னின்று காத்தலையும் குறித்தலை நோக்கத் 'தலை' என்பதன் முதன்மை தலைமைப் பொருள்கள் விளங்கும். தலைக்கட்டு - குடும்பம்

தலை என்பது ஆள் என்னும் பொருளது. தலையை எண்ணுதல் ஆளை எண்ணுதலாம். தலைகட்டுக்குத் தக்க கோயில்வரி, ஊர்வரி, வாங்குதல் இன்றும் நடைமுறை. ஒரு கணவன், மனைவி அவர்களின் குழந்தைதான் என்னும் அளவே தலைக்கட்டு எனப்படுகிறது. ஆகலின் பொதுக் குடும்பம் என்னும் அளவில் குறைந்து பொதுக் குடும்பத்தின் ஓர் உறுப் பாகிய சிறு குடும்பத்தின் அளவே தலைக்கட்டாகும். "இந்த ஊரில் ஐந்நூறு தலைக்கட்டு இருக்கிறது” எனக் கணக்கிடுவர்.