உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

உந்தி

இளங்குமரனார் தமிழ்வளம் 1

தொப்புள் என்பது உந்தி எனப்படுதல் பொதுவழக்கு. அதன் வடிவமைப்பு நடுமேடும் சுற்றிலும் பள்ளமும் உடையதாக இருக்கும். இதனைக் கருதிய கருத்தால் சுற்றுப் பள்ளத்திடையே உயர்ந்துபட்ட மேட்டை உந்தி என்பது ஏலக்காய், தேயிலைத் தோட்ட வழக்காக உள்ளது.

உந்தித்தள்ளல், உந்தீபற என்பவையும், உந்துபந்து என்னும் ஆடல்கள ஆட்சியும் எண்ணத் தக்கவை.

உப்பங்காற்று

கடலில் இருந்து வரும் காற்று உப்பங் காற்று என்று வழங்கப்படுதல் நெல்லை வட்டார வழக்கு.

உவர்த் தன்மை அமைந்ததும், நிலம் சுவர் ஆயவற்றை உவர்த் தன்மையால் உப்பி உயரச் செய்வதுமாம் அக்காற்று உப்பங்காற்று ஆயது. வயிற்றுப் பொறுமல், உப்புசம் என்பது எண்ணத் தக்கது. தென்கிழக்கு மூலையை உப்பு மூலை என்பதும் தென்னக வழக்காம். உப்பங்காற்று பயிர்களை நன்கு வளரச் செய்யும் என்பர்.

உப்பிலி

தஞ்சை மாவட்ட வழக்கில் உப்பிலி என்பது ஊறுகாயைக் குறித்து வழங்குகிறது. உப்பு நிறையப் போட்டு ஊறவைப்பதே வழக்கம். அதற்கு 'உப்பிலி' (உப்பு இல்லா தது) என்பது முரணாக உள்ளது. தப்புச் செய்வாரைத் தப்பிலி என்பது போன்ற மங்கல வழக்கெனக் கொள்ளலாம். எனினும் அப்படிக் கொள்ள வேண்டியதில்லை. மோர், தயிர் உணவுக்கு வேறு எத்தொடுகறிகள் இருப்பினும் ‘ஊறுகாய்’ வைத்தலே நாடறி வழக்கு. அவ்வுணவுக்கு ஒப்பில்லாத தொடுகறியாக இருப்பதால் ஒப்பிலி எனப்பட்டு, உப்பிலி யாகியிருக்க வேண்டும். ஒப்பிலி யப்பனையே உப்பிலியப்பன் ஆக்கவல்லார் ஊறுகாயைத் தானா மாற்றிவிட மாட்டார்?

உப்புக்குத்தி

முகவை வட்டார வழக்கில் ‘குதிங்காலை', உப்புக் குத்தி என்னும் வழக்கம் உண்டு. உப்புதல் உயர்தல்; குந்துதல், குத்த வைத்தல் என்பவை காலைமடிக்காமல் நிறுத்தி அமரும் நிலை யாகும். குத்துக்கால் என்பது கமலைக்கிணற்றின் இறைவைச் சால் வடம் தாங்கும் மரத்தூண்களாம். அதற்கு, மேற்குத்துக்